"அண்ணா ரெடி.. 4 மணி போஸ்டர் அடி".. அதிகாலையில் வரும் லியோ.. "கவிதா" ஹேப்பி அண்ணாச்சி!

Oct 15, 2023,01:47 PM IST

கொச்சி: கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கே லியோ படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளதால் அந்த மாநில விஜய் ரசிகர்கள் செம ஹேப்பியாக உள்ளனர். கேரளாவில் ரசிகர்களின் மகிழ்ச்சியை தியேட்டர்களும் கொண்டாடி வருவதால் அந்த மாநிலமே விழாக்கோலம் பூண்டுள்ளது போல காணப்படுகிறது.


விஜயக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் உண்டு. இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டையே மிஞ்சும் அளவுக்கு கேரள விஜய் ரசிகர்கள் உண்டு இல்லை என்று கலக்கி விடுவார்கள்.




கேரளாவில் விஜய் படங்கள் வெளியாகும்போதெல்லாம் தியேட்டர்கள் திண்டாடிப் போய் விடும். அந்த அளவுக்கு விஜய்க்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் கேரளாவில் உள்ளது.  விஜய் ரசிகர்களை வைத்து அங்கு ஒரு படமே கூட வெளியாகி பட்டையைக் கிளப்பிய கதையும் உண்டு.


இந்த நிலையில் எல்லா விஜய் படங்களைப் பலோவே, லியோ படத்தையும் மிகப் பிரமாண்டமாக வரவேற்க அங்குள்ள ரசிகர்கள் தடபுடலாக தயாராகி வருகின்றனர். அவர்களைப் போலவே தியேட்டர்களும் ரெடியாகி வருகின்றன. தமிழ்நாட்டில்தான் அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கே காட்சிகள் தொடங்கவுள்ளன. இதற்கான அனுமதியும் கொடுக்கப்பட்டு விட்டது. இதனால் ரசிகர்கள் ஹேப்பியாகியுள்ளனர்.




இதுகுறித்த அறிவிப்புகளை கேரள மாநில தியேட்டர்கள் தங்களது டிவிட்டர் பக்கங்களில் போட்டு ரசிகர்களுடன் அதை ஜாலியாக பகிர்ந்து வருகின்றனர். கொச்சியில் உள்ள கவிதாதியேட்டர் போட்டுள்ள ஒரு அறிவிப்பில், "அண்ணா ரெடி.. 4 மணி போஸ்டர் ரெடி" என்று கூறி மகிழச்சியை வெளிப்படுத்தியுள்ளது.


இதற்கிடையே, கேரளா, கர்நாடகா எல்லைப் புறங்களில் வசிக்கும் விஜய் ரசிகர்கள், அதிகாலைக் காட்சியைப் பார்க்க எல்லை தாண்டிச் செல்லவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் எல்லைப் புறங்களும் கூட பரபரப்பாகவே காணப்படுகிறது. இப்படித்தான் தலைவா படத்தின்போதும் ஏகப்பட்ட பிரச்சினை உருவாகியது. அதேபோல விஸ்வரூபம் படத்துக்கும் கூட பிரச்சினை வந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் லியோவுக்கு ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள் வந்தபோதும் கூட அக்கம் பக்கத்து மாநிலங்களில் திருவிழாக் கோலத்துடன் தியேட்டர்களும், ரசிகர்களும் காணப்படுவதை சற்று பொறாமையுடன் தமிழ்நாட்டு விஜய் ரசிகர்கள் பார்த்துக் கொண்டுள்ளனர்.


சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்