- புரட்சிப் பாவை தே.ஜெனிட்டா ரீனா
குட்டி ஜப்பான் எதுன்னு கேட்டா டக்குன்னு சிவகாசி பக்கம் கை காட்டி விடுவீர்கள்.. ஏன்னா நீங்கதான் பிரில்லியன்ட் ஆச்சே.. அதை விடுங்க குட்டி ஹாலந்து பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா.. அதப் பத்திதான் இப்போ சொல்லப் போறேன்.. ஓடியாங்க!
திண்டுக்கல்லைத்தாங்க குட்டி ஹாலந்துன்னு சொல்வாங்க.. ஏன் தெரியுமா.. அதுக்கு முன்னாடி ஹாலந்து நாட்டின் சிறப்பைத் தெரிஞ்சுக்குவோம்.. தினை, மலர்கள், காய்கறிகள் என விவசாயத்திற்குப் பெயர் பெற்றது இந்த ஹாலந்து நாடு. நெதர்லாந்து என்றும் இதைச் சொல்வோம். அதேபோலத்தான் நம்முடைய திண்டுக்கல்லும் மேற்கண்ட விவசாயத்திற்குப் பெயர் போனது. இதனால்தான் இதை குட்டி ஹாலந்து என்று செல்லமாக அழைக்கிறார்கள்.
திண்டுக்கல் பூட்டுதானே பேமஸ் என்று நீங்க நினைக்கலாம்.. தலப்பாகட்டி பிரியாணி வேற இருக்கே என்றும் கூட சொல்லலாம். அது மட்டும் இல்லைங்க.. அதையும் தாண்டி ஏகப்பட்ட விசேஷங்கள் இந்த ஊரில் இருக்குங்க. லிஸ்ட் போடறோம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

திண்டுக்கல் மாவட்டத்தின் சிறப்புகள் .. திண்டுக்கல் பூட்டு, திண்டுக்கல் மலைக்கோட்டை, பழனி முருகன் கோவில்,
மலைகளின் இளவரசி கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை, சிறுமலை மலைவாழை, சிறுமலை பலாப்பழம், கொடைரோடு பன்னீர் திராட்சை, திண்டுக்கல் பன்னீர் ரோஸ் , விடுதலை வீரர் சுப்பிரமணிய சிவா மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல் அரசு பொது மருத்துவமனை, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி, புனித வளனார் தேவாலயம் , கோட்டை மாரியம்மன் கோயில் , பேகம்பூர் தர்கா, சின்னாளப்பட்டி சுங்கடி சேலை, காந்திகிராம பல்கலைக்கழகம், ஒட்டன்சத்திரம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன், திண்டுக்கல் அண்ணா பூ மார்க்கெட் வணிக வளாகம்,திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி, திண்டுக்கல் பேருந்து நிலையம், பன்றிமலை ஆத்தூர் நீர்த்தேக்கம்
தோல் தொழிற்சாலைகள், திண்டுக்கல் உணவு சேமிப்பு கிடங்கு, பழனி பைபாஸ் வெங்காய பேட்டை,
திண்டுக்கல் அனைத்து பழங்கள், காய்கறிகள், பூக்கள், தானியங்கள், வாழை, கரும்பு, பருத்தி, மக்காச்சோளம் ,
மானாவாரிப் பயிர்கள் அனைத்தும் விளைவதற்கேற்ற மண் வளங்களை உடையது.
அதிக கல்வி நிலையங்களும் நிறைந்திருக்கும் மாவட்டம் திண்டுக்கல். நாகா ரவை, மைதா, ஆட்டா தொழிற்சாலை
ஆடு, மாடு, கோழிகள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. கல்வியில் கற்றவர்கள் அதிகமாக உள்ளனர். பெயரில் கல் உள்ள மாவட்டம் திண்டுக்கல்.. ஆனால் இங்குள்ள மக்களின் வார்த்தை முழுக்க முழுக்க ஜில் ஜில்தான்!
(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராகவும் வலம் வருகிறார்)
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}