வட்டு எழுத்து தமிழ் என்பது என்ன?

Feb 03, 2026,02:43 PM IST

- கலைவாணி கோபால்


கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி. பி.பத்தாம் நூற்றாண்டு வரை தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் பயன் பாட்டில் இருந்த நிலையில் தற்போது இவ்வித எழுத்துக்கள் கல்வெட்டுகளில் மட்டுமே காண முடிகிறது. 


முதன் முதலில் தமிழ் மற்றும் பிராமி எழுத்தில் இருந்து தோன்றியது வட்டெழுத்து என்று டி. ஏ. கோபிநாத ராவ் அவர்கள் கண்டறிந்து இவர் கருத்தை பதிவிட்டார். ஆனால் அதை நிரூபிக்க சான்றுகள் எதுவும் இவரிடம் இல்லாததால், அவருடைய கருத்து நிலுவையிலே வைக்கப்பட்டது. 


ஆனால், தற்போது கிடைக்கப்பெற்ற பூலாங்குறிச்சி, இந்தளூர், அரசாலபுரம், அரச்சலூர், போன்ற ஊர்களில் கிடைத்த கல்வெட்டுகளை ஆராயும் போது தமிழில் மற்றும் பிராமி எழுத்துக்களின் வளர்ச்சி  வட்டெழுத்து என்றும் கருத்து நிலவி வருகிறது. 


மேலும்,  கி.பி .ஏழாம் நூற்றாண்டு வரை இந்த எழுத்துக்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்தது என்றால் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நடுக்கல் எடுக்கவும்,




முற்கால பாண்டியர்கள் அரசாணை பிறப்பிக்கவும்,( செம்பாலான தகடுகள்) செப்பெடுகளில் ஆவணங்கள் பதிவு செய்யவும், இவ்வித எழுத்துக்களை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவை ...பாண்டியர்கள் மட்டுமல்லாமல் சேர, சோழர் என்று முப்பெரும் வேந்தர்களாலும் இந்த வட்ட எழுத்தை பயன்படுத்தி  வந்துள்ளனர். என்பது  கல்வெட்டுகளின் வாயிலாக நாம் அறிய முடிகிறது. மேலும்,.. இவ்வெழுத்துக்களை தெ க்கன், கோலெழுத்து இன்று வேறு பெயர்களிலும் குறிப்பிடப்படுகின்றது. 




பெரும்பாலான கோயில் கல்வெட்டுகளில் அக்காலத்தில் அதாவது கி.பி .பத்தாம் நூற்றாண்டு வரை எழுத்துக்களில் அவர்கள் பயன்பாட்டில் பயன் படுத்தி வந்துள்ளனர், கி. பி. பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு இவ் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தொன்மை மாறி தற்கால தமிழாக வழிவெடுத்து உள்ளது என்றும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தங்களை கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்.. கோதை வாழும் ஊர்.. சீரான ஸ்ரீவில்லிபுத்தூர்!

news

சிறு பிள்ளைகள் இன்று சிறுபிள்ளைகளாக இல்லை!

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

news

திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?

news

Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!

news

தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!

news

என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?

news

தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!

அதிகம் பார்க்கும் செய்திகள்