சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தவண்ணம் இருப்பதால் அவர் உடல் வைக்கப்பட்டுள்ள கோயம்பேடு பகுதி ஸ்தம்பித்துப் போயுள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் தலையாகவே உள்ளது.
விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை அங்குதான் இறுதிச் சடங்குகளும், நல்லடக்கமும் நடைபெறவுள்ளது. இதையடுத்து தற்போது ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.
பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என சாரை சாரையாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கோயம்பேடு பகுதி முழுவதும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. பொதுமக்கள் கண்ணீருடனும், அழுது புலம்பியபடி கோயம்பேட்டை முற்றுகையிட்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் விஜயகாந்த் குறித்த நினைவுகளைப் பகிர்ந்தபடி அழுது புலம்பிக் கொண்டு போவது பார்க்கவே சோகமாக இருக்கிறது.
கோயம்பேடு பகுதியில் அதிக அளவில் மக்கள் குவிவதாலும், வாகனங்கள் குவிவதாலும் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் இப்பகுதியில் தங்களது பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}