கிருஷ்ண ஜெயந்தி.. நாடெங்கும் வலம் வந்த க்யூட் கிருஷ்ணன்களும், ராதைகளும்!

Sep 06, 2023,08:58 PM IST

சென்னை:  கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அழகனகான கெட்டப்களில் க்யூட்டான கிருஷ்ணன்களும், ராதைகளும்  நாடெங்கும் வலம் வந்து கலகலப்பை ஏற்படுத்தினர்.


இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் முன்பு இது விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. அதே போல கேரளாவிலும் களை கட்டியிருக்கும். ஆனால் சமீப ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும்  கிருஷ்ண ஜெயந்தி  விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


குட்டிக் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டும், ராதை வேடம் போட்டும் பெற்றோர்கள், குடும்பத்தினர் அழகு பார்ப்பது வழக்கம். அந்த வகையில் இன்றும் க்யூட்டான கிருஷ்ணன்களும், ராதைகளும் வீடுகள் தோறும் உற்சாகத்தை ஏற்படுத்தினர்.  வீடுகளில் குட்டி கிருஷ்ணர் பாதம் கோலமிட்டு பூஜைகளும் செய்யப்பட்டன.

 



வழக்கம் போல கேரளாவில் இந்த முறையும் கிருஷ்ணர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குட்டிக் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் போட்டு அவர்களை ஊர்வலமாக அழைத்து வந்த நிகழ்வுகள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் களை கட்டியிருந்தன.


கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார்.  அதர்மத்திற்கு எதிராக தர்மத்தை நிலை நாட்டியவர் கிருஷ்ணர் என்று அவர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்