4 பேரோ.. 400 பேரோ.. எதிர்ப்பு தெரிவிப்பதுதான் முக்கியம்.. பாஜகவுக்கு அழகிரி பதிலடி!

Mar 28, 2023,11:50 AM IST
சென்னை: ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிதான் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டேன். கூட்டம் சேர்க்கும் நோக்கம் என்னிடம் அப்போது இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினத்தன்று கே.எஸ். அழகிரி தலைமையில் சிலர் கும்பகோணம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் செய்தனர். அப்போது வெகு சிலரே அழகிரியுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.



இதை பாஜகவினர் கிண்டலடித்து மீம்ஸ் போட்டிருந்தனர். அண்ணாமலை, குஷ்பு போன்றோரும் கிண்டல் செய்திருந்தனர். இதுகுறித்து கே.எஸ். அழகிரி விடுத்துள்ள டிவீட்:

சமீபத்தில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் சோழன் விரைவு தொடர் வண்டி முன்பாக எனது தலைமையில் நடைபெற்ற மறியல் ஆர்ப்பாட்டம் குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சிலர் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி காலையில் அரியலூர் மாவட்டம், டி.பழுரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு காலை 11 மணியளவில் காங்கிரஸ் நண்பர்களோடு வந்து சேர்ந்தேன். அப்போது அறையில் ஓய்வு அறையில் பத்திரிகையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய செய்தியை அறிய நேரிட்டது. உடனடியாக பத்திரிகையாளர்களிடம் கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினேன். ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கேட்டவுடனே கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டேன். அந்த நேரத்தில் எனக்குள்ளே உருவான மன எழுச்சியின் அடிப்படையில் உடனடியாக முதல் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமென நினைத்த போது அங்கே வர இருக்கிற ரயில்முன் மறியல் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தேன்

அப்போது என்னுடன் இருந்த மாநில துணை தலைவர் ராஜேந்திரன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன், குடந்தை நகர தலைவர் மிர்சாவூதீன் ஆகியோருடன் சேர்ந்து அப்போது அங்கு வந்த சோழன் விரைவு தொடர் வண்டி முன்பு பா.ஜ.க.வுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி மறியல் போராட்டத்தை நடத்தினேன். தலைவர் ராகுல்காந்தி அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு உடனடியாக எதிர்வினையாக்குவது தான் எனது நோக்கமாக இருந்ததால் என்னோடு நான்கு பேர் இருக்கிறார்களா, நானூறு பேர் இருக்கிறார்களா என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனது முதல் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென்று விரும்பினேன்.

அதன்படி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டேன். அந்த போராட்டம் தொலைக்காட்சிகளில் வெளியாகி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டங்களுக்கு தூண்டுதலாக  இருந்தது. இதை விமர்சிப்பதற்கு பா.ஜ.க.வினருக்கோ, மற்றவர்களுக்கோ என்ன அவசியம் இருக்கிறது. விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தியடிகள் 1940 ஆம் ஆண்டில் அறிவித்த போராட்டத்திற்கு பெயர் தனிநபர் சத்தியாகிரகம். ஒரு தனிநபர் சத்தியாகிரகம் செய்து பிரிட்டீஷ் ஆட்சியை அகற்றிவிட முடியுமா என்று எவரும் காந்தியடிகளை விமர்சித்ததில்லை.

அதைப்போல, தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்ட உடனே என்னுள் பெருக்கெடுத்த உணர்ச்சியின் அடிப்படையில் தான் மறியல் போராட்டத்தை நடத்த முன்வந்தேன். என் இளமைப் பருவம் முதல் அநீதிக்கு எதிராக போராடுகிற ஒரு போராளியாகத் தான் எனது அரசியல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த அடிப்படையில் தான் எனது ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்