சென்னை: தவெக தலைவர் விஜய்யை பெயர் குறிப்பிடாமல் அதேசமயம், மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மூத்த அரசியல் தலைவரும், வழக்கறிஞர், எழுத்தாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் குறித்து பாசத்துடன் தம்பி தம்பி என்று பேசி வந்த சீமான் திடீரென நேற்று ஏதாவது ஒரு பக்கம் நில்லு. நடு ரோட்டில் நின்றால் லாரி அடித்து செத்துப் போவ என்று பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் சீமான் பேச்சுக்கு கே.எஸ். ராதாகிருஷ்ணனிடமிருந்து ஒரு பதில் வந்துள்ளது. அது இதோ:
பஞ்ச் டயலாக்கோ நெஞ்சு டயலாக்கோ வயித்து டயலாக்கோ இல்லை. இதய டயலாகோ வீரிய டயலாக்கோ காசு கொடுக்காமலும் காசு வாங்காமலும் அழைத்து வரமால் விரும்பி தங்கள் செலவில் வந்து தானாக விரும்பி கூடிய கூட்டம் அல்லவா! All Roads Lead to Rome - எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கி! என்பது போல தமிழ்நாட்டின் அனைத்துச் சாலைகளும் விக்கிரவாண்டியை நோக்கி அல்லவா இருந்தது! பிரியாணி, மது, ரூபாய் 200…400 என சப்ளை கூடாது என்ற இந்த மக்கள் பெரு திரள் சங்கமம்..
வாகனங்கள் ஒரு இடத்தை விட்டு கடப்பதற்கு ஏழு மணி நேரம் ஆனதும் புதிய வரலாறு தானே! மக்கள் குறிப்பாக இளஞர்கள் ஆரவாரத்தால் மாநாட்டுப் பந்தலே குலுங்கியது! தேசிய அகலச் சாலைகளே டிராபிக்கில் ஸ்தம்பித்தன.
பெண்களும் ஆண்களுமாய் கிராமம் நகரம் என்று இல்லாமல் பல பல லட்சம் பேர் கூடிய தமிழக வெற்றிக் கழக மாநாடு தானாய்ப் பெருகிய ஆற்று வெள்ளம்! பிறகு அவையே மாற்று உள்ளங்களாகவும் இருந்தன! அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் நுழைவு மிகப் பெரும் தமிழகத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது!
வெறும் வாயை மெல்லுபவர்களுக்கும் துள்ளுபவர்களின் வாயை அடக்கவும் கூடிய மாபெரும் மக்கள் கூட்டம்! பதட்டம், பயம் என்ற தங்கள் நிலையில் சிலரின் வெறும் கேலிப்பேச்சுகளால் அவற்றைத் தகர்த்து விட முடியாது என்று கூறியுள்ளார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}