தூத்துக்குடி: தமிழ்நாட்டின் முதல் ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் உருவாகவுள்ளது. தமிழ்நாட்டின் நீண்ட நாள் கனவான இந்த ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளுக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் குலசேகரப்பட்டனம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. இப்பகுதியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்காவும் அமைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் குலசேகரப்பட்டினத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து மதியம் 1:30 மணிக்கு, ஆர்.எச். 200 சவுண்டிங் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதில், செயற்கைகோள்களுக்கு பதிலாக காற்றின் திசை வேகத்தை அளவிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் விண்ணில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் காற்றின் திசை வேகம் எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து கொள்ள இது உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி நிறைவடைந்ததும் செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு முழுமையாக ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் பணிகள் முறைப்படி தொடங்கும் என்று இஸ்ரேல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குலசேகரப்பட்டனத்தின் முக்கியத்துவம் என்ன?
கிட்டத்தட்ட 2400 ஏக்கர் பரப்பளவில் புதிய ராக்கெட் ஏவுதளம் உருவாகவுள்ளது. இந்தியாவில் தற்போது ராக்கெட் ஏவுதளமானது ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் மட்டுமே உள்ளது. இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அதேசமயம், குலசேகரப்பட்டனத்தில் இயற்கையாகவே ராக்கெட் செலுத்துவதற்கான பூகோள சூழல் சிறப்பாக இருப்பதால் அங்கு அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரப்பட்டு வந்தது.
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளமானது, கடந்த 1971ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது வங்கக் கடலோரம் அமைந்துள்ளது. இருப்பினும் சில வகை ராக்கெட்டுகள் ஏவுவதற்கு இந்த இடம் சரியானதாக இல்லை. காரணம், ஸ்ரீஹரிகோட்டாவுக்கு தெற்கே இலங்கை உள்ளது. ராக்கெட் செலுத்தும்போது பிற நாடுகள் மீது அது செல்வது போல இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். இதன் காரணமாக தற்போது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகளை கிழக்கு திசையில் செலுத்தி வருகிறார்கள். இதனால் நமக்கு அதிகம் செலவாகும், நேர விரையமும் ஏற்படுகிறது.
ஆனால் குலசேகரப்பட்டனத்தில் இந்த சிக்கல் கிடையாது. குறிப்பாக சிறிய வகை ராக்கெட்டுகளை செலுத்த குலசேகரப்பட்டனம் மிகச் சிறப்பானதாகும். அதாவது எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட்டுகளை இந்த இடத்திலிருந்து செலுத்த முடியும். இதனால் கூடுதல் எரிபொருள் செலவாவது மிச்சப்படும். இதற்குக் காரணம், இந்தக் கடல் பகுதியில் பல ஆயிரம் மைல் பரப்பளவுக்கு எந்த நாடும், தீவும் கிடையாது என்பதே இதற்குச் சாதகமான சூழலாகும். இதனால்தான் குலசேகரப்பட்டனத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வந்தது.
குலசேகரப்பட்டனம் ராக்கெட் ஏவுதளம் நடைமுறைக்கு வந்த பின்னர் தமிழ்நாடும் சர்வதேச விண்வெளி அறிவியல் வரைபடத்தில் இடம் பெறும். உள்ளூர் மக்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பும் கிடைக்கும் சூழல் ஏற்படும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}