குறை குடம்‌ கூத்தாடும் !

Feb 04, 2026,04:50 PM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


அனைத்தும் தெரிந்தவன் ஆயிரம் செய்வான்.ஆனால் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டான். அதுவே அவனின் இயல்பு என்று கூறுவார்கள்.ஆனால் அது அவனின் விதி.. .ஆனால் அவன் செய்த அனைத்தும்‌ கடவுளுக்கும் அவனுக்கும் அவனால் பயன் அடைந்தோருக்கும் தெரியும்.

 

அவனுக்கு நேர் எதிரே ஒன்றுமே தெரியாது.ஆனால் அதுவே அவருக்கு தெரியாது. தனக்கு எல்லாம் தெரியும் என்ற பிதற்றலும் பெருமையும் பித்தலாட்டமும் நிறைய இருக்கும். இதுவும் விதி.... அந்தப் போலியை நம்பி சில முட்டாள்கள்..... ஜால்ரா வேறு....




இதில் மற்றவர்களைப் பார்த்து குறை வேறு..... முதலில் நம்மிடம் உள்ள குறைகளை சரி செய்து விட்டு..அடுத்தவரிடம் செல்ல வேண்டும்...


நம் வாழ்வில் நித்தம் நித்தம் நாம்‌ அனைவரும் கொதித்துப் பார்க்கும் விஷயம் தான் இது....


இதற்கு என்ன தான் தீர்வு?


ஒரு தீர்வும் இல்லை.


குறை குடம்‌ கூத்தாடத் தான் செய்யும்.


குடத்தை நிரப்பவும் முடியாது.... கூத்தாடுவதை நிறுத்தவும் முடியாது... கூடவே நாமும் சேர்ந்து ஒரு குதி குதித்து விட்டு போக வேண்டியது தான்!!!!!


மனமிருந்தால் மார்க்கம் உண்டு....


சிலருக்கு கிடைக்கும் அனுபவம் மற்றும் வயதுக்கேற்ற அந்த முதிர்ச்சியும் அவங்களா...இவங்க என்னும் அளவிற்கு மாற்றத்தைக் கொடுக்கும். அப்படி பல பேர் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் சாதனைகள் படைக்கத் தொடங்குவர். அவர்கள் பல பேருக்கு முன்னோடியாகவும் மாறியிருப்பார்கள்.


நாம் நம்மைப் புரிந்து கொண்டு நம்மில் பல மாற்றங்களை ஏற்படுத்தி நிறைகுடமாக மாறுவது நம் கையில் தான் உள்ளது.... .நம்மிடம் உள்ள நல்ல குணங்களைப் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும்.


நம் வேலையை நாம் சரிவர செய்கிறோமா... யோசிக்க வேண்டும்.

ஒரு மாணவனின் வேலை என்ன? நன்றாகப் படிப்பது.

ஒரு படைப்பாளன்.....நல்ல படைப்புகளைத் தர வேண்டும்.

அவரவர் தமக்குரிய கடமைகளை செய்ய ஆரம்பித்தாலே போதும்....


முடியாது...தெரியாது ..நேரம் இல்லை.....இந்த வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு....


உழைப்பைத் கொடு.....தெரியாததைத் தேடு..... புத்தகம் படி...புதிதாய்க் கற்றுக் கொள்.... முயற்சி திருவினையாக்கும்!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு

news

தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

news

தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!

news

பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்

news

பிரியாவிடை!

news

திருமாலுக்கு உகந்த துளசியின் தெய்வீக மகிமை!

news

Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!

news

Short Story by Joseph Samraj: என் பெயர் ரவி!

அதிகம் பார்க்கும் செய்திகள்