நடிகர் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷனில்.. நெஞ்சை நெகிழ வைக்கும்.. குரங்கு பெடல்!

Apr 12, 2024,03:44 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து தயாரித்தும் வருகிறார். அந்த வரிசையில் தற்போது இயக்குனர் கமலக்கண்ணனின் குரங்கு பெடல் திரைப்படத்தை வெளியிட இருக்கிறார்.  இப்படம் ரசிகர்களின் நெஞ்சை நெகிழ வைக்கும் கதை அம்சமாக உருவாகியுள்ளதாம். அதனால் இக்கதையை வெளியிடுவதில் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெருமை கொள்கிறதாம்.


சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் காவிரி ஆற்றின் அழகிய கரையோரங்களில் கோடை காலத்தில்  1980 களில் நடந்த நிகழ்வுகளை இப்படம் நினைவு படுத்துகிறது. மேலும் இப்படத்தின் கதை மனதைக் கவரும் வகையில் சைக்கிள் ஓட்டும் கலையில் தேர்ச்சி பெற துடிக்கும் மகனான மாரியப்பனுக்கும், அவனது தந்தைக்கும் இடையே உள்ள அன்பை வெளிக்கொண்டு வருவதாம். ராசி அழகப்பன் எழுதிய சைக்கிள் சிறுகதையால் ஈர்க்கப்பட்ட, குரங்கு பெடல் திரைப்படம் குடும்ப அமைப்பு மற்றும் கனவுகள் பற்றியதாம்.




இப்படத்தை கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இவர் இயக்கும் படங்களில் தனது புதுமையான அணுகுமுறை மற்றும் தனித்துவமான பாணிக்காக பலருடைய பாராட்டுகளை பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே மதுபான கடை, வட்டம் போன்ற படங்களை இயக்கி, இப்படங்களுக்கு பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு கோயம்பத்தூர் ரோட்டரி சங்கத்தின் மதிப்பிற்குரிய சமூக விருதுதினையும் பெற்றவர். கடந்த 2012 ஆம் ஆண்டு இவர் இயக்கிய அரவிந்தன் புஷ்கரத்தில் சிறப்பு குறியுடன் சிறந்த அறிமுக இயக்குனர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றார் கமலக்கண்ணன். இதற்கு மறு வருடம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த தயாரிப்பாளர் என்ற பட்டத்தையும் பெற்றவர். தமிழ் சினிமாவின் இவருடைய அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பு அனைத்தும் மதிக்கப்படக்கூடியவை.


இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 2024 இல் மிகச்சிறந்த படம் என பலதுறை வல்லுனர்கள் கணிக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயன் மற்றும் கலையரசன் இணைந்து தயாரித்துள்ளனர். இதில், சந்தோஷ் வேல்முருகன், வி ஆர் ராகவன், எம் ஞானசேகர், ரத்தீஷ் மற்றும் சாய் கணேஷ் ஆகியோர் இந்த தலைசிறந்த படைப்பில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் திறமையான நடிகர் காளி வெங்கட் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.நக்கலைட் பிரசன்னா, பாலசந்தர் மற்றும் ஜெகன் திவாகர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இந்த நிலையில் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும் எனவும், அனைவரையும் பாராட்டையும் பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


சமீபத்திய செய்திகள்

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்