ஊட்டி: நீலகிரி மாவட்டம் பிக்கப்பத்தி மந்து மலைப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்களைக் காண, வெளியாட்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறிஞ்சி பூ நீலகிரி மலை பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையில் பூக்கும் அதிசய பூவாகும். இந்த பூக்கள் நீலநிறத்தில் இருப்பதால் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என பெயர் வந்தது. குறிஞ்சி பூ புதர்வகையை சேர்ந்த செடியாகும். ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா என்பது இப்பூவின் தாவரவியல் பெயராகும். இந்த குறிஞ்சி பூ குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 வகைகள் உள்ளன. இதில் குறிப்பாக 30க்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன.

நீலகிரியில் உள்ள தோடர் இன ஆதிவாசி மக்கள் தங்களது வயதை குறிஞ்சி பூ பூக்கும் சுழற்சியை வைத்து கணக்கிட்டு வருவார்களாம். எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப் பார்த்தார்கள் என்பதை கொண்டு மேற்கு தொடர்ச்சி மலைவாழ் பளியர் பழங்குடியினர் தங்கள் வயதை கணித்துள்ளனர். இந்த குறிஞ்சி பூக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு காலங்களில் பூக்கும் தன்மை கொண்டதாகும். 1,3,6,12 ஆண்டுகளில் இவை பூக்கின்றன. இதில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி தற்போது நீலகிரி பகுதிகளில் பூத்துள்ளன.
ஊட்டி அருகேயுள்ள கெங்கமுடி அருகே பிக்கப்பதிமந்து பகுதியில் மலைச்சரிவில் பல இடங்களில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் ஸ்டோபிலாந்தஸ் மலர்கள் அதிகளவில் பூத்துள்ளன. இந்த மலர்கள் பூத்துள்ள மலை பகுதிக்கு வெளியாட்கள் யாரும் செல்லக் கூடாது என வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும், இங்கு விலங்குகள் நடமாட்டம் இருப்பதாலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)
வசந்த நவராத்திரி!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!
உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof
நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
{{comments.comment}}