சென்னை: தமிழர்கள் உட்பட இந்தியாவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் குவைத் தீ விபத்தில் உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
குவைத்தில் மங்காஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அங்கு தங்கி வேலை செய்து வந்துள்ளனர். திடீரென அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து கட்டடத்தின் எல்லா பகுதிகளிலும் தீ பரவியது.
இதில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த நிலையில் இதில் உயிரிழந்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அதிலும் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தத் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு குவைத் நாட்டிலுள்ள அல் அதான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உறவினர்களின் நிலையை அறிந்து கொள்ள 96 56 550 52 46 என்ற எண் மூலம் தெரிந்து கொள்ளலாம் என இந்திய தூதரகம் நேற்று அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நிலையில் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்நாட்டு முதல்வர் மு க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் படி அயலாக்க தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையகரகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்து குறித்த விவரங்களை இந்தியா: +91 1800 309 37 93, வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 69009909 என்ற எண்கள் மூலம் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் இரங்கல்:
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 50-க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு ஆழ்ந்த இரக்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
குவைத்தில் தீ விபத்தில் இந்தியர்கள் இறந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. கொடிய தீ விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் குணமடைய விழைகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யவும், இறந்தோர் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை தேவை எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}