டெல்லி: ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்து உத்தரவிட்ட நிலையில் நேற்று இரவு ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத்யாதவ் வீட்டில் மட்டன் கறி சாப்பிட்டு ஹேப்பியாக அதைக் கொண்டாடியுள்ளார் ராகுல் காந்தி.
இந்த மட்டன் கறியை லாலு பிரசாத் யாதவே சமைத்து ராகுல் காந்திக்குப் பரிமாறினார் என்பது கூடுதல் விசேஷமாகும்.
சூரத் கோர்ட் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் 2 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முதலில் குஜராத் உயர்நீதிமன்றத்திலும்,பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் மேல் முறையீடு செய்தார் ராகுல் காந்தி. சுப்ரீம் கோர்ட், தற்போது இடைக்கால நிவாரணமாக தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்த சந்தோஷத்தை காங்கிரஸார் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ராகுல் காந்தி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து நேற்று இரவு லாலு பிரசாத் யாதவின் டெல்லி வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரை லாலு பிரசாத் யாதவ் உற்சாகமாக வரவேற்றார். பின்னர் ராகுல் காந்திக்கு,லாலு பிரசாத் யாதவ் இரவு விருந்து அளித்துக் கெளரவித்தார்.
இந்த விருந்தில் மட்டன் கறி பரிமாறப்பட்டது. இதை லாலுவே சமைத்தாராம். அவரது கையால் பரிமாறவே, நன்கு ருசித்துச் சாப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி. இந்த விருந்துக்காக பீகாரிலிருந்தே ஆட்டுக்கரி உள்ளிட்ட பொருட்களை வரவழைத்திருந்தாரம் லாலு பிரசாத் யாதவ். பீ கார் ஸ்டைலில் அதை சமைத்துள்ளார். அதை ராகுலிடேமே கூறி சந்தோஷப்பட்டாராம் லாலு. இந்த சந்திப்பின்போது நிறைய அரசியல் பேசப்பட்டதாம். தனிப்பட்ட முறையிலும் சிறிது நேரம் ராகுல் காந்தியுடன் பேசிக் கொண்டிருந்தாராம் லாலு பிரசாத் யாதவ்.
டெல்லியில் உள்ள தனது மகள் மிசா பாரதி வீட்டல்தான் லாலு பிரசாத் யாதவ் தற்போது தங்கி ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}