கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

Jul 15, 2025,06:14 PM IST
சென்னை: தேசியப் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு இதை இன்று கொண்டாடுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதையொட்டி இன்று காலை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காமராஜர் பிறந்த நாளையொட்டி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த ஒரு தொகுப்பு:


கே. காமராஜ் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப்  போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்.




அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்!

நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று!

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

இன்று, இந்தியாவின் தலைசிறந்த மைந்தனும், முன்னோடி சமூக நலத் திட்டங்களுக்காக தமிழக மக்களால் பெரிதும் போற்றப்படுபவருமான கே. காமராஜருக்கு எங்கள் உளமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான காமராஜர், சமூக நீதிக்காக அயராது பாடுபட்டவர். அவரது தொலைநோக்குமிக்க மதிய உணவுத் திட்டம், தடைகளை உடைத்து, பின்தங்கியவர்களுக்கும் கல்வியைக் கொண்டு சேர்த்த ஒரு சக்திவாய்ந்த உந்துசக்தியாகத் திகழ்ந்தது.

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளன. மக்களின் நலனுக்கான அவரது உறுதியான அர்ப்பணிப்பையும், அவரது உணர்வுபூர்வமான, பதிலளிக்கக்கூடிய ஆட்சியையும் போற்றி, அவரது நீடித்த பாரம்பரியத்தை நாங்கள் கொண்டாடுகிறோம்.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

கல்விக் கண் திறந்த கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் இன்று. பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து மறைந்து தன் புகழால் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மாபெரும் தலைவர்.  தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்பதற்காக கிராமங்கள் தோறும் பள்ளிகளைத் தொடங்கினார்.

இவர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த காலகட்டத்தில், ஊழலற்ற வளர்ச்சிப் பாதையை நோக்கிய மாநிலமாக தமிழ்நாடு சென்றுகொண்டிருந்தது. இவரது திறமையான ஆட்சியும் நிர்வாகமும், இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கென ஒரு தனி இடம் கிடைக்க காரணமாக அமைந்தது.

கர்ம வீரர் என்றும், கிங் மேக்கர் என்றும், ஏழைப் பங்காளன் என்றும் மக்களால் போற்றப்பட்டவர். இந்த நாளில், கர்ம வீரர் காமராஜர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

நாம் தமிழர் தலைவர் சீமான்

மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து இலவச மதிய உணவு கொடுத்து தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கடவுள்..! 

மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி, வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு 33,000 நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண்மை செழிக்க வழிசெய்த ஆகச்சிறந்த ஆட்சியாளர்..! 

ஆவடி கனரக ஆலை, சேலம் உருக்கு ஆலை, நெய்வேலி நிலக்கரித் திட்டம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை என 18 க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட புரட்சியாளர்..! 

இத்தனை சாதனைகளும் செய்த 9 ஆண்டுகால ஆட்சியில், மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்ற வில்லை.

6 முறை கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறைவாசம், 
15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,
14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,
9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்,
8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,
3 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரசு கட்சி தலைவர்,
2 பிரதமர்களை உருவாக்கிய ஒற்றைப் பெருந்தலைவர்!
பதவிகள் பல வகித்தபோதும்
ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை..!
கோடி கோடியாக சொத்து சேர்க்கவில்லை..!
குடும்பத்து வாரிசுகளுக்குப் பதவி கொடுக்கவில்லை..!

உண்மையும் நேர்மையுமான ஒப்பற்ற தூய ஆட்சி தந்து தமிழ்நாட்டினை முன்னேற்றிய தன்னிகரில்லாத் தலைவர்! 

நாட்டின் விடுதலைக்காகப் போராடி 3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய  தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம் அவரைப்போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
 
எழுத்தறிவித்த இறைவன்!

நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!


இலவச சீருடை, மதிய உணவு திட்டம் போன்ற மகத்தான திட்டங்களை உருவாக்கி அதை செம்மையாக செயல்படுத்திய கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று. 

ஏழை மக்களை காக்க, அவர்களின் பசிப்பிணி போக்கி கல்வி வழங்கிய ஏழை பங்காளர். சுதந்திர போராட்டம் துவங்கி நாட்டிற்காகவும், பிறந்த மண்ணின் மக்களுக்காகவும் அவர் செய்தவை ஏராளம். தமிழகத்தில் தற்போதுள்ள அணைகளில் பல அணைகள் ஐயா கர்மவீரர் காலத்தில் அவர் உருவாக்கியவை தான். காலம் தவறாமல் கடமையை செய்தால் வாழ்வில் உயர்வை அடையலாம் என்பதை அவரது வாழ்க்கையில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதரும் கற்று தெரிந்துகொள்ள வேண்டிய பாடமாக திகழும் பாமர மக்களின் தலைவர் கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களின் புகழை போற்றி வணங்குகிறோம்.

தவெக சார்பில் சிலைகளுக்கு அஞ்சலி

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சித் தலைவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இன்று பிறந்த நாளைக் கொண்டாடினர்.

இதுதொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருந்த அறிவிப்பில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத் தலைவர் அவர்கள் உத்தரவின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து, நாளை (15.07.2025) செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி முதல், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும் திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்