கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் இன்று மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

Oct 21, 2024,10:32 AM IST

சென்னை:   தமிழ்நாட்டின் உட்புற மாவட்டங்கள், கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


வங்க கடலில் உருவான வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி காரணமாக நேற்று பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று இரவு முழுவதும் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக திருப்பூர், கோவை,மதுரை, நாமக்கல், வால்பாறை, ஓசூர், உதகை, திருவண்ணாமலை, சேலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நல்ல மழை பெய்துள்ளது. திருப்பூரில் அதிகபட்சமாக 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. 




இதற்கிடையே வங்க கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். பின்னர் இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் புயலாக வலுப்பெற கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாட்டின் இன்றைய மழை குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, 


கோவை,தருமபுரி , ஈரோடு , கரூர் , கிருஷ்ணகிரி , நாமக்கல் , நீலகிரி , திருப்பூர் சேலம்  மற்றும் தென் மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் இன்று மழை நீடிக்கும்.  


நேற்று உள் மற்றும் தென் மாவட்டங்களில் காற்றுடன் மழை பெய்ததால் அம்மாவட்டங்களில் கண்கவர் நாளாக அமைந்திருந்தது. அதேபோல் இன்று முதல் நாளை காலை வரை  காற்று வீச இருப்பதால் உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இதமான சூழல் நிலவும். இது தவிர பெங்களூர் மாவட்டத்திலும் இன்று கனமழை வாய்ப்புள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சேலம், திருப்பூர், தேனி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, கோவை, நாமக்கல், திருநெல்வேலி, மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளிலும் பரவலாக 50 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்