சென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜய்யின் 67 வது படமாக உருவாகி உள்ளது லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஆக்ஷன், என்டர்டைன்மென்ட் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் அக்டோபர் 19 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

படத்தின் ரிலீசிற்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ளதால் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது நடத்த போகிறார்கள் என அனைவரும் ஆர்வமாக கேட்க துவங்கி விட்டனர். விஜய்யின் மாஸான, அரசியல் பஞ்ச் கலந்த பேச்சை கேட்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். விஜய் அரசியலுக்கு வர தயாராகி வருவதால் இந்த விழா அதற்கான ஒரு ஆரம்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
செப்டம்பர் 30 ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாகவும், அதற்கான மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கடந்த சில நாட்களாக எக்ஸ் தளத்தில் தகவல்களும், பல விதமான போட்டோக்களும் தீயாய் பரவி வருகிறது. இதனால் லியோ ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போதும் வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.
ஆனால் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவு செய்திருப்பதாக செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
லியோ ஆடியோ வெளியீட்டு விழா குறித்து செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், " அதிகமானவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரிலும், பாதுகாப்பு காரணங்களை மனதில் கொண்டும் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். ரசிகர்களின் விருப்பத்தை மதிப்பு தொடர்ந்து லியோ குறித்த அப்டேட்களை வெளியிட்டு அவர்களை மகிழ்விக்க உள்ளோம்.
அரசியல் அழுத்தமா?

பலரும் கற்பனை செய்து கொள்வது போல் அரசியல் அழுத்தம் காரணமாகவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவே இந்த முடிவு எடுக்கப்படவில்லை " என செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ விளக்கமும் அளித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே #LeoAudioLaunch என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி உள்ளது.
அது மட்டுமல்ல தயாரிப்பு நிறுவனம் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து விஜய் ரசிகர்கள் #WeStandWithLeo என்று ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் அதையும் டிரெண்டாக்கி உள்ளனர். அரசியல் அழுத்தம் காரணமாகவே லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}