Leo collection: அடேங்கப்பா... ரூ.100 கோடியை கடந்த லியோ முதல் நாள் வசூல்!

Oct 20, 2023,10:33 AM IST
சென்னை : விஜய் நடித்த லியோ படம் ரிலீசான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. இது படத்திற்கு கிடைத்துள்ள நெகடிவ் கமெண்ட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி உள்ளது.

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் லியோ. இந்த படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. 



உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த படத்தை பார்ப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு அதிக விலை கொடுத்து கூட டிக்கெட் வாங்கி படம் பார்த்தனர். அமெரிக்காவில் மிக அதிகமான ஸ்க்ரீன்களில் திரையிடப்பட்டுள்ள முதல் விஜய் படம் லியோ தான். எதிர்பார்ப்பை கிளப்பிய அளவிற்கு படத்திற்கு விமர்சனங்கள் கிடைக்கவில்லை. பாசிடிவ் விமர்சனங்களை விட நெகடிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்துள்ளது.

இருந்தாலும் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். பட்டாசு, மேள தாளம் என அதகளப்படுத்தி விட்டனர். ரசிகர்களை ஏமாற்றாத வகையில் விஜய்யும் தனது நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி உள்ளார். லியோ பற்றி பலவிதமான விமர்சனங்கள் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் படத்தில் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளிவர துவங்கி உள்ளன.

லியோ படம் ரிலீசான முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.145 கோடிகளை வசூல் செய்துள்ளதாம். இந்தியாவில் மட்டும் ரூ.68 கோடிகளை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் நாளிலேயே அதிக வசூலை பெற்ற விஜய் படம் இது தான் என சொல்லப்படுகிறது. 2021 ம் ஆண்டு ரிலீசான மாஸ்டர் படத்திற்கு பிறகு மிகப் பெரிய வசூலை பெற்றுள்ள படம் இது. 

லியோ படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ.68 கோடிகளை வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.32 கோடியையும், கேரளாவில் ரூ.12.50 கோடியையும், கர்நாடகாவில் ரூ.14.50 கோடியையும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.17 கோடியையும் வசூல் செய்துள்ளது.

அதேபோல தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளிலும் முதல் நாளிலேயே தலா ரூ 10 கோடியைத் தாண்டி வசூல் செய்த முதல் தமிழ்ப் படம் என்ற புதிய சாதனையையும் லியோ படைத்துள்ளது. இதுதவிர பல்வேறு நாடுகளில் கபாலி, ஜெயிலர் பட வசூல்களையும் லியோ முந்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் லியோ படம் வசூசில் பட்டையைக் கிளப்பும் என்று விஜய் தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

அதிகம் பார்க்கும் செய்திகள்