- மஞ்சுளா தேவி
பாலக்காடு : தமிழ்நாட்டை விட கேரளாவில் மிகப் பெரியஅளவில் விஜய் ரசிகர்கள் லியோ பட ரிலீஸை மாஸ் செய்து விட்டனர். தியேட்டர்கள் தோறும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கிறது. மிகப் பெரிய கூட்டம் அலை மோதியதால் தியேட்டர்கள் உள்ள பகுதிகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதைக் காண முடிந்தது.
கேரளா முழுவதும் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று அதிகாலை 4 மணிக்கு வெளியானது.
கேரளாவில் விஜய்க்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். குறிப்பாக விஜய் படங்களை விரும்பி பார்க்கும் பெண் ரசிகைகள் ஏராளம்.
பாலக்காட்டில் அரோமா என்ற திரையரங்கு உள்ளது. இந்தத் திரையரங்கு வளாகத்தில் உள்ள தியேட்டர்களில் எப்போதும் விஜய் படம் என்றாலே பெண்களுக்கு பிரத்யோக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்வது வழக்கம். அதுபோல இன்று வெளியான லியோ படத்திற்கு பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் சிறப்புக் காட்சி காலை 7 மணிக்கு திரையிடப்பட்டது.
ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல், மாஸ்டர், வாரிசு, பீஸ்ட் போன்ற படங்களும் இதே போல பிரத்யோக சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம். லியோ திரைப்படம் பிரத்யேகமாக பெண்களுக்காக திரையிடப்பட்டதால், பெண் ரசிகைகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர்களும் ஜாலியாக, சந்தோஷமாக, உற்சாகமாக கண்டு களித்தனர்.
"விஜய் எங்க அண்ணன், எங்க தளபதி.. அவர் முகத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே தியேட்டருக்கு வந்தேன்" என்று ஒரு பெண் ரசிகை நெகிழ்ச்சியுடன் கூறினார். பலர் விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகமும் செய்தனர்.
விஜய் பட பாணியில் சொல்வதானால்.. கேரள ரசிகர்கள் சும்மா வெறித்தனம் வெறித்தனம் என கொண்டாடி வருகின்றனர். லியோ படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் தரும் விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் அண்ணா..ணா.. விஜய் அண்ணாதான்.. ஒவ்வொரு காட்சியும் சும்மா தெறிக்க விட்டிருக்கிறார்.. வேற லெவல் ..மாஸ் அடிப்போலி.. என கேரளா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}