Leo third single: "அன்பெனும்".. லியோ 3வது பாடல் வந்தாச்சு.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி?

Oct 11, 2023,08:29 PM IST

சென்னை : விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று படத்தில் மூன்றாவது சிங்கிளாக அன்பெனும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் லியோ. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் அக்டோபர் 19 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை உள்ளிட்ட ஏற்பாடுகள் தீயாய் நடந்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்திற்கு முதல் 5 நாட்களுக்கு 5 தினசரி 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 


லியோ படத்தின் முதல் இரண்டு பாடல்கள் அரசியல் ரீதியான சர்ச்சைகளை கிளப்பியது. அடுத்து ஆடியோ வெளியீட்டு விழா நடத்துவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் கடைசி நிமிடத்தில் அவ்விழா பல காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்க படத்தின் டிரைலரை வெளியிட்டனர். இதில் இடம்பெற்ற அதிகப்படியாக ரத்தம் தெறிக்கும் காட்சிகள், வன்முறைகள், விஜய் பேசிய கெட்ட வார்த்தை என அனைத்தும் பலத்த எதிர்ப்பையும், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது. இதையடுத்து இந்த டிரைலர் 13 கட்களை போட்டது சென்சார் போர்டு.




அது மட்டுமல்ல படத்தின் டிரைலரை விமர்சகர்களும், ரசிகர்களும் அக்குவேரு ஆணிவேராக பிரித்து மேய்ந்து, அலசி ஆராய்ந்து தினமும் ஒரு புது தகவலை வெளியிட்டு வந்தனர். இது ஹாலிவுட் படங்களின் காப்பி என்றும் சிலரும், விக்ரம் படத்தில் வரும் காட்சிகள் பலரும் அப்படியே இதிலும் இடம்பெற்றுள்ளது, அவர் யார், இவர் யார், இதை கவனித்தீர்களா, அதை கவனித்தீர்களா என சோஷியல் மீடியாவை அதகளப்படுத்தி விட்டனர் கடந்த ஒரு வாரமாக. 


படம் ரிலீசிற்கு இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது. இந்த சமயத்தில் வரவேற்பை விட நெகடிவ் விமர்சனங்களே அதிகமாக வருகிறதே என படக்குழுவினர் நினைத்தார்களோ என்னவோ, இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், விஜய் - த்ரிஷா ரொமான்ஸ் காட்சிகள் இல்லையே என ஆதங்கப்பட்ட ரசிகர்களை குஷிப்படுத்தவும் இன்று மூன்றாவது சிங்கிளை வெளியிட்டுள்ளனர். அன்பெனும் ஆயுதம் நீயே என்ற மெடிலோடி, காதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 


விஷ்ணு எடவனின் வரிகளில், அனிருத் இசையில், அனிருத் மற்றும் லோதிகா இணைந்து பாடிய அன்பெனும் பாடல் காஷ்மீரின் அழகு, விஜய்- த்ரிஷாவின் காதல், காஷ்மீர் அழகையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு இருக்கும் த்ரிஷாவின் அழகு, குடும்ப பாசம், சென்டிமென்ட், காதல் நினைவுகள் என அனைத்தும் கலந்த கலவையாக, மனதை வருடுவதாக அமைந்துள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்களில் ஹீரோயின் இருக்க மாட்டார், இருந்தாலும் அவருக்கு பெரிதாக முக்கியத்துவம் அளிக்கப்படாது.  ஆனால் த்ரிஷாவிற்காக அந்த ஃபார்முலாவை லியோ படத்தில் கைவிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.


லோகேஷ் கனகராஜிற்கு இப்படி எல்லாம் கூட பாடல் வைக்க தெரியுமா? இது லோகேஷ் கனகராஜ் படம் தானா? என அனைவரும் வாய் பிளந்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு சூப்பரான பாடலை 3வது சிங்கிளாக வெளியிட்டு அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார்கள். ஏற்கனவே லியோ ரிலீஸ் எப்போ என காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது மற்றொரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு காதிற்கு இனிமையாகவும், மனதிற்கு இதமாகவும் ஒரு காதல் பாடலை படைத்துள்ளார். 


சூப்பர் என சொல்ல வைத்துள்ள அன்பெனும் பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் #LeoThirdSingle, #LeoFilm, #PremaOhAyudham, #Anbenum ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்