மயிலாடுதுறை: மயிலாடுதுறை குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை இன்று வரை பிடிபடாமல் போக்கு காட்டி வருகிறது. இதனைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர். சிறுத்தையை தேடும் பணி 8வது நாளாக நீடித்து வருகிறது. தற்போது மயிலாடுதுறையில் சிறுத்தை இருக்க வாய்ப்பில்லை என்று வனத்துறையினர் கருதுகின்றனர்.
மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில இரவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர் . மேலும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறை வேண்டுகோள் விடுத்திருந்தனர். காவிரி ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் 19 கேமராக்கள் வைத்து சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆரோக்கியநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தையை தேடும் பணி இன்றுடன் 8வது நாளாக நீடித்து வருகிறது. ஆனால் இதுவரை சிறுத்தை கண்ணில் தென்படவில்லை. பொதுமக்கள் யாருக்கும் அசம்பாவிதம் ஏற்படாதவாறு சிறுத்தையை விரைவில் பிடிக்க வேண்டும் என ராட்சத வலை, கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளனன. ஆனால் இப்பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை சித்தர்காடு பகுதிக்கு சென்றிருக்கலாம் என கூறப்பட்டது.
பல இடங்களில் சிறுத்தையை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், சிறுத்தையை கண்டறிய கோவை wwf india நிபுணர் குழு 30 கேமரா ட்ராப்புகளுடன் களமிறங்கி தீவிரமாக தேடி வருகின்றனர்.சிறுத்தையைப் பிடிக்க டிரோன் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. சிறுத்தை அந்த ஊர் மக்களிடையே போக்கு காட்டி இன்று வரை சிக்காமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
இதற்கிடையே, சிறுத்தை மயிலாடுதுறைக்குள் இருக்க வாய்ப்பில்லை என்றும் அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்திற்குள் புகுந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் கருதுகின்றனர்.
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}