சுத்தம் சுகாதார வாழ்வைத் தரும்.. உலக சுகாதார தினம்!

Apr 07, 2026,06:41 PM IST
- முனைவர் கோ. லதா

சுத்தம் சுகாதார வாழ்வைத் தரும்
நித்தம் நிம்மதி உள்ளம் தரும்
நோயற்ற நோக்கமே பெரும் பேறு
பேயற்ற பேருவகை தரும் பேறு
காய்கறி கனிவகை உணவில் சேர்ப்போம்
தூயநீர் தூய்மையை உடலில் சேர்ப்போம்
காலை காற்றில் நடை பழகு
ஞாலம் ஞானத்தோடு இதைப் பழகு
உடற்பயிற்சி உறுதி தரும் உடம்பு
திடமுடன் திருந்தும் புது உடம்பு



மனதை மகிழ்வாய் என்றும் வைப்போம்
தினமும் தியானம் செய்து வைப்போம்
கைகளைக் கழுவி உணவை உண்ணு
பக்கத்துச் சுத்தம் பார்த்து உண்ணு
நொறுக்குத் நொடிநேரத் தீமை தவிர்ப்பாய்
சுறுசுறுப்பாய் சுதந்திரமாய் நோயைத் தவிர்ப்பாய்
ஏப்ரல் ஏழினைப் போற்றி நிற்போம்
நலமே நலமென உயர்ந்து நிற்போம்
விழிப்பு விதைப்போம் ஊரில் எங்கும்
அழிப்பு அகற்றுவோம் நோயை எங்கும்
ஆரோக்கிய ஆற்றலை என்றும் பெறுவோம்
போராட்ட பேரின்ப வாழ்வைப் பெறுவோம்
சிந்தனை சிதறாமல் சுகம் காப்போம்
வந்தனை வழியில் வளம் காப்போம்!

(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செம்மொழியான தமிழ் மொழியே

news

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!

news

இயற்கை நீதி!

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

அதிகம் பார்க்கும் செய்திகள்