- கவிஞர் க. முருகேஸ்வரி
பள்ளிக்கூடம் ...நாம் யாராக இருந்தாலும் பள்ளிக்கூட நினைவுகள் தான் பசுமரத்தாணி ......
பள்ளிக்கூட நாட்களில் நாம் கற்றுக் கொண்ட அனுபவங்கள் தான் போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் மற்றவர்களோடு போட்டி போட்டு வாழ வழிகாட்டும் சிறந்த பாடங்கள்.....
பள்ளிக்கூடம் என்பது வெறும் பாடங்களைப் படித்து தேர்ச்சி பெறும் இடம் மட்டும் அல்ல.... வாழ்க்கை என்றால் என்னவென்றே பள்ளிக்கூடம் தான் நமக்கு கற்றுக் கொடுக்கிறது....
பெற்றோரின் அன்போடும் அரவணைப்போடும் கைபிடித்து நடந்த நாம்... முதன்முதலில் தனியாக நடந்த இடம்... வேற்று நபர்களுடன் பழக ஆரம்பித்த இடம்தான் பள்ளிக்கூடம்.....
நட்பு என்ற புதிய உலகம் அங்கே தான் உருவாகிறது ....

நட்பு மட்டுமா??கேலி, கிண்டல், அன்பு, மோதல், ஏமாற்றம், பரிசு,பாராட்டு, வெற்றி, தோல்வி ,சிரிப்பு, அழுகை,போட்டி என அனைத்து அனுபவங்களும் பள்ளிக்கூடத்தில் தான் நமக்கு கிடைக்கிறது.....
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை குழு மனப்பான்மை தலைமை பண்பு என உள்ளார்ந்த திறன்களும் அங்கே தான் வளர்கின்றன....,
நான் படித்த பள்ளியில் நான் கற்றுக் கொண்ட படிப்பும் விளையாட்டும் ஆடலும் பாடலும் இப்போதும் என்னை தனித்துவப் படுத்திக் காட்டுகிறது ....
பள்ளிக்கூடங்களில் உள்ள ஒவ்வொரு வசதியையும் நூலக வசதி ஆய்வக வசதி விளையாடும் இடம் விளையாட்டு உபகரணங்கள் கணினி வசதி என அனைத்தையும் பயன்படுத்தி பள்ளிக்கூட அனுபவங்களை முழுமையாக உணர்ந்து நாம் படித்தால் தான் நல்ல ஒரு வாழ்க்கை பயணத்தையும் நாம் எதிர்கொள்ள முடியும்...
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்.... இல்லையெனில்... கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற கதையாகி விடும்.... மீண்டும் பள்ளிக்குப் போகலாம் என்று பாடிக்கொள்ளலாமே தவிர..... மீண்டும் நாம் அந்த இடத்திற்கு சென்று அந்த அனுபவங்களைப் பெற முடியாது....
பள்ளிக்கூடம் படிப்பதற்கு மட்டுமல்ல...படித்துக் கொண்டே வாழ்க்கைக்குத் தேவையான அனுபவ அறிவையும் பெறுவதற்கு..... நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கு.....
ஆதலால்.... படிக்க வேண்டிய வயதில் படித்து விடு.....
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}