சென்னை: தமிழ்நாட்டின் தென் பகுதியில் 28ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், இதே காலகட்டத்தில் வட தமிழ்நாட்டிலும், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. இந்த நிலையில் தென் தமிழ்நாட்டுக்கு ஒரு சந்தோஷச் செய்தியைச் சொல்லியுள்ளது வானிலை ஆய்வு மையம். இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

22ம் தேதி முதல் 28ம் தேதி வரை தென் தமிழகத்தில், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
22ம் தேதி முதல் 26ம் தேதிவரை தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சி இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 செல்சியஸ் டிகிரி வரை வெப்ப நிலை இருக்கக் கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றம் இருக்காது.
இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்களைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}