பிழைப்பு தேடி.. வெளியூர் செல்ல நினைத்தவர்.. அயோத்தி ராமரால் பணக்காரராகி இருக்கிறார்.. எப்படி?

Feb 22, 2024,07:25 PM IST

அயோத்தி: அயோத்தியில் பலரது வாழ்க்கை டோட்டலாக மாறியிருக்கிறதாம்.. சில மாதங்களுக்கு முன்பு வரை முறையான வேலை இல்லாமல், பிழைப்பு தேடி வேற ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்த தீபக் பாண்டே என்பவர், இப்போது அயோத்தியிலேயே வீடு கட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறாராம். எல்லாத்துக்கும் காரணம் சாட்சாத் நம்ம ராமர் கோவில்தான்!


அயோத்தி  ராமர் கோவில் வந்ததிலிருந்து அந்த நகரமே முழுவதுமாக மாறிப்போச்சு. அந்த ஊர் மக்களின் வாழ்க்கையே டோட்டலா மாறிடுச்சு. குறிப்பாக சிறு தொழில் செய்து வருவோர், கடைக்காரர்கள், சாலையோர வியாபாரம் என பல தொழில்கள் உயிர் பெற்றுள்ளன. இந்த கோவில் திறப்பு விழாவுக்கு முன்னாடி வரைக்கும் அங்க பலருக்கும் வேலை வாய்ப்பு என்பதே கிடையாது. ரொம்ப வறுமை, ஏழ்மை இது போன்ற நிலைமை தான் இருந்து வந்தது. தற்போது இந்த நிலைமை மாறி உள்ளது.




அயோத்தி நகரில் ராமர் கோவில் வந்ததிலிருந்து தினசரி பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து குவிகிறார்களாம். பலருக்கும் தொழில்கள்  சிறப்பாக நடந்து வருகின்றன. நல்ல முன்னேற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது. பல தொழில்கள் லாபகரமாக இயங்க ஆரம்பித்துள்ளனவாம். குறிப்பாக சாலை ஓரம் உள்ள சிறு, குறு  தொழில்களில் நல்ல வியாபாரம் நடந்து வருகிறது. இதனால் வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரித்து பணம் கொட்ட ஆரம்பித்து விட்டது.


ராமர் கோவில் பகுதியில் உள்ள தெருவில் 48 வயதான பிரமேஷ் பாண்டே வசித்து வருகிறார். அந்தப் பகுதியில் மூன்று அறைகள் கொண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளார். தற்போது அந்த வீட்டை அவர் பக்தர்களுக்கு வாடகைக்கு விட்டு செம காசு பார்த்து வருகிறாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், "கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததில் இருந்து தினசரி ராமர் கோவில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு ஒரு அறைக்கு தலா 3000 வீதம் வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டி வருகிறேன். சாமி தரிசனத்திற்காக வரும் பார்வையாளர்களை பொறுத்து ஒரு நாளைக்கு ரூபாய் 1400 முதல் ரூபாய் 3000 வரை வாடகைக்கு விடுகிறேன்" என பாண்டே கூறியுள்ளார். பாண்டே வாழ்க்கையில் சூப்பரான வருமானத்தைக் காட்டியுள்ளார் ராமர்!



ராமர் கோவிலுக்கு அடுத்த தெருவை சேர்ந்த ஜஸ்வந்தி ஷர்மா என்பவர் ராமர் குறித்த பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் இப்போது கூட்டம் அலை மோதுவதால் வியாபாராம் சூடு பிடித்துள்ளதாம். வருமானம் அதிகரித்துள்ளதாம்.


அப்பகுதியில் சாப்பாடு கடையை  நடத்தி வரும் பிரபாத் குப்தா என்பவரும் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கிறார். பக்தர்களுக்கு தோசை தயாரித்துக் கொடுக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறார்.  சாப்பாடு தட்டை பக்தர்களுக்கு வழங்கும் போதும் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறுகிறார். நான் தளம் கட்டுவதற்கான அடித்தளம் போட்டுள்ளேன். ராமர் மனது வைத்தால் வாடிக்கையாளர்களை அதிகம் பெற முடியும் என்று அவர் உற்சாகமாக கூறுகிறார்.


வியாபாரிகள் மட்டுமல்லாமல், உள்ளூர் சுற்றுலா ஏஜென்சி நிறுவனங்களுக்கும் வருவாய் பல மடங்கு அதிகரித்துள்ளதாம். சுற்றுலா ஏஜென்சி நடத்தி வரும் உமேஷ் சிங் என்பவர் கூறுகையில், கடவுள் அருளால் கடந்த ஒரு மாதமாக முன்பதிவுகள் அதிகரித்து வருகின்றன. இது தொடரும் என நம்புகிறேன் என கூறினார்.




அயோத்தியில் ஜனவரி இரண்டாம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. இதில் பல்வேறு தலைவர்கள், தொழில் அதிபர்கள், திரை நட்சத்திரங்கள், யோகிகள், மடாதிபதிகள், என பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தற்போது அயோத்திக்கு  தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இது மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். 


அயோத்தியில் ரயில் நிலையம் நவீனமாக்கப்பட்டுள்ளது. புதிதாக சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்தும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டிலிருந்தும் பலர் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனால் அயோத்தி செம பிசியான நகரமாக மாறியுள்ளது. பக்தி நகரமாக இருந்து இப்போது அது சிறந்த பிசினஸ் நகரமாக மாற ஆரம்பித்துள்ளது.


ரமேஷ் பாண்டே போல,  அயோத்தியில் வீடு வைத்துள்ள பலரும் தங்களது வீடுகளை பக்தர்களுக்கு வாடகை விடுவதற்கு ஆரம்பித்துள்ளனர். பலர் வீடுகளைப் புதுப்பித்து அதை வாடகைக்கு விடுவதற்கு ஏற்றார் போல மாற்ற ஆரம்பித்துள்ளனர்.  இது மட்டும் இல்லாமல் பல கடை உரிமையாளர்கள் ஏற்கனவே உள்ள கட்டடங்களுக்கு மேல் புதிய கட்டடங்களை எழுப்பி வருகின்றனர். ராமர் கோவில் பாதையில் உணவகங்கள், பூஜை சாமான்கள் விற்கும் கடைகள், மட்டுமல்லாமல் டிராவல் ஏஜென்சி அலுவலகங்கள், துணிக் கடைகள், செல்போன் கடைகள், பரிசு பொருட்கள் கடைகள் உள்ளிட்ட பல கடைகள் வரத் தொடங்கியுள்ளன.




அயோத்தி செல்லும் வழியில் பைசாபாத் நகரத்தில் இருந்து பெரிய கட்டிடங்கள், விருந்தினர் மாளிகைகள், கார் பார்க்கிங் உள்ளிட்ட உணவகங்கள், முதலியவை கட்டப்பட்டு வருகின்றன. தீபக் பாண்டே, பிரமோத் பாண்டே, ஜஸ்வந்தி ஷர்மா, பிரபாத் குப்தாவைப் போல பலரது வாழ்க்கையும் ராமர் புண்ணியத்தால் ஜொலிக்க ஆரம்பித்துள்ளனவாம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்