லோகேஷ் கனகராஜ் வாங்கிய காஸ்ட்லி கார்.. இப்படி ஒரு சிறப்பா ?

Aug 18, 2023,04:41 PM IST
 சென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜ் வாங்கிய புதிய காஸ்ட்லி கார் பற்றியும், அதன் சிறப்பம்சங்கள் பற்றியும் தான் கோலிவுட் முழுவதும் செம ஹாட் டாக் போய் கொண்டிருக்கிறது. இந்த காரை பார்த்து அனைவரும் அசந்து போய் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் டைரக்டர்களில் ஒருவராக உள்ளார் லோகேஷ் கனராஜ். அடுத்தடுத்த பிளாக் பஸ்டர் வெற்றிகளால் , இவர் அடுத்த படம் எப்போது பண்ணுவார்? யாரை வைத்து பண்ண போகிறார் என அனைவரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் அக்டோபர் 19 ம் தேதி ரிலீசாக உள்ளது.



லியோ படத்தில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக சென்று கொண்டிருப்பது பற்றி அனைவரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில், புதிய காஸ்ட் சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். பிஎம்டபிள்யூரி 7 சீரிஸ் ரகத்தை சேர்ந்த இந்த காரின் விலை ரூ.1.70 கோடி. இந்த கார் மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடியதாம். 5 விநாடிகளிலேயே இ��்த தூரத்தை அடைந்து விட முடியுமாம்.  அது மட்டுமல்ல இந்த காரை, மொபைல் போனை பயன்படுத்தியே ஸ்டார்ட் செய்யவும், நிறுத்தவும் முடியுமாம்.

ஷோரூம் மேனேஜரிடம் இருந்து காரின் சாவியை லோகேஷ் வாங்கும் போட்டோ, இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. கடந்த ஆண்டு தான் விக்ரம் படம் ரூ.430 கோடி வசூல் செய்த வெற்றியை கொண்டாடுவதற்காக அதன் தயாரிப்பாளரான கமல், லோகேஷ் கனகராஜிற்கு லெக்சஸ் ரக காரினை பரிசாக வழங்கினார். அப்போது நெட்டிசன்கள் பலரும், லோகேஷ் கனகராஜ் அடுத்த லெவலுக்கு செல்ல வாழ்த்து கூறி இருந்தனர்.

லியோ படத்தை முடித்த கையோடு ரஜினியின் தலைவர் 171, கார்த்தியின் கைதி 2, சூர்யாவை வைத்து ரோலக்ஸ் ஆகிய படங்கள் என வரிசையாக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பல படங்களை தனது கைவசம் வைத்துக் கொண்டு படுபிஸியான டைரக்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்