சென்னை: தளபதி விஜய், திரிஷா நடிப்பில் உருவாகி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜொலித்த, அனிருத் இசையமைப்பில் அதிரடி காட்டிய லியோ படம் நவம்பர் 24ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் நடித்த லியோ படம் நெட்பிளிக்ஸ் சேனலில் நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்ற செய்தி தற்போது வெளியாகி ரசிகர்களை குளிர்வித்துள்ளது. விஜய், திரிஷா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட வெற்றி படம்தான் லியோ.
இந்த படத்தை netflix ott இணையதளம் வாங்கியிருந்தது. இந்த படம் எப்போது ஓடிட்டியில் வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகம் இருந்தது. காரணம் லியோ திரைப்படம் தியேட்டரில் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் வாரி குவித்ததால் ரசிகர்களிடையே வீட்டிலும் ஆற அமர இந்தப் படத்தைப் பார்க்க காத்திருந்தனர்.
இந்த நிலையில் நவம்பர் 24ஆம் தேதி இப்படம் ஓடிடியில் வெளியாகிறது. netflix சேனலில் இதைக் கண்டு மகிழலாம். ஏற்கனவே லியோவுக்கு முன்பாக வந்து சக்கை போடு போட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் சன் டிவியில் தீபாவளி சிறப்பு படமாக வெளியாகிவிட்டது. இந்த நிலையில் அடுத்தபடியாக லியோ படமும் இப்போது ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
\
தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய வசூலைக் குவித்த படங்கள் ஜெயிலரும், லியோவும். அதற்கு முன்பு வசூல் ராஜாவாகப் பட்டையைக் கிளப்பிய படம் விக்ரம்... இப்படி அடுத்தடுத்து வசூலைக் குவிக்கும் தமிழ்ப் படங்களால் தயாரிப்பாளர்களால் மட்டுமல்லாமல், மொத்தத் திரையுலகினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்ல உதவும் என்பது அவர்களது நம்பிக்கை.
என்ன ரசிகர்களே தியேட்டரில் பார்த்து விசில் அடித்து மகிழ்ந்த உங்கள் தளபதியை வீட்டிலும் விசில் அடித்து வரவேற்கத் தயாரா... வாங்க என்ஜாய் பண்ணலாம்!
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}