- மீனா
சென்னை: ஒருவரால் எந்த அளவுக்கு நேர்மயாக இருக்க முடியும்.. தான் செய்தது தவறு என்பதை எவர் ஒருவர் பகிரங்கமாகவும், சற்றும் தயக்கம் இல்லாமலும் ஒத்துக் கொள்ள முடிகிறதோ.. அதைத்தான் நாம் நேர்மை என்று சொல்லலாம்.
அப்படிப்பட்ட நேர்மையான மனிதராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த லியோ படத்தை ரசிகர்கள் திருவிழாவைப் போல் கொண்டாடினார்கள். படம் பட்டையைக் கிளப்பியது வசூலிலும்.. ஆனாலும் லியோ படம் குறித்தான கலவையான விமர்சனங்களே அதிகம் வந்தன.
முதல் பாதி சூப்பரா இருக்கு.. பட் 2வது பாதி சுத்தமாக பிடிக்கவில்லை.. படத்தில் வன்முறை அதிகம்.. நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன. விஜய்யை இப்படி பயன்படுத்தியிருக்கக் கூடாது.. ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியது உறுத்தலாக இருக்கிறது என்று ஏகப்பட்ட விமர்சனங்கள்.. ஆனால் வழக்கமாக இயக்குநர்கள் இதையெல்லாம் நிராகரிப்பார்கள்.. பிடிச்சாப் பாருங்க. இல்லாட்டி விட்ருங்க என்றுதான் பெரும்பாலானவர்கள். ஆனால் லோகேஷ் கனகராஜ் 2வது பாதி சரியில்லை என்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.

லியோ தொடர்பான கலவையான விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன் என்று "ஜப்பான்" ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ஜப்பான். வாரியார் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் இதில் சுனில், வாகை சந்திரசேகர், இயக்குனர்களான கே. எஸ். ரவிக்குமார் ,விஜய் மில்டன் மலையாள நடிகரான சணல் அமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஜி.வி .பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அக் .28ம் தேதி நடைபெற்றது.
விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது: ஒரு இயக்குனரின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட வேண்டுமாயின் அதற்கான பரிசோதனை முயற்சிக்கு ஒரு பெரிய நடிகர் தயாராக இருக்க வேண்டும். என்னுடைய கரியரில் அப்படிப்பட்டவர் தான் கார்த்தி. அவருடைய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது எனக்கு பெருமை.
மார்ச் அல்லது ஏப்ரலில் ரஜினி உடனான படம் தொடங்கும். இன்னும் ஓரிரு நாட்களில் லியோ சக்சஸ் மீட் அப்டேட் வரும் . படத்தின் வசூலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அது தயாரிப்பாளர் தொடர்புடைய விஷயம். மக்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதுதான் முக்கியம். திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாக இருப்பதாக கலவையான விமர்சனங்களும் வருகின்றன. அதையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
லியோ படத்தைப் பொறுத்தவரை விஜய் நடிப்பையும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தையும் யாரும் குறை கூறவில்லை. ஆனால் திரைக்கதையில் எங்கேயோ கோட்டை விட்டுள்ளனர். முதல் பாதி போலவே 2வது பாதியும் அமைந்திருந்தால் இந்தப் படம் வேற லெவலில் ஓடியிருக்கும் என்பது பலரின் ஆதங்கமாகும்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}