டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலுக்கு போர் வேகத்தில் தயாராக ஆரம்பித்து விட்டது காங்கிரஸ் கட்சி. சசிகாந்த் செந்தில் தலைமையில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.
சசிகாந்த் செந்திலை யாரும் மறந்திருக்க முடியாது.. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அட்டகாசமான வெற்றியைத் தேடிக் கொடுக்க தீவிரமாக உழைத்தவர்தான் சசிகாந்த் செந்தில்.
முன்னால் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். கர்நாடகத்தில் பணியாற்றியவர். பின்னர் தனது வேலையை விட்டு விட்டு காங்கிரஸில் இணைந்தார். இவரது தலைமையில்தான் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிரடி காட்டியது.

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பிரசார உத்திகள், ராகுல் காந்தியின் பிரசார உத்தி உள்ளிட்டவற்றை வகுத்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து அழகாக வடிவமைத்தது செந்தில் தலைமையிலான குழுதான். பாஜகவின் பல்வேறு அஸ்திரங்களையும் தகர்த்து இந்தக் குழு அமைத்துக் கொடுத்த வியூகத்தால்தான் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை கர்நாடகத்தில் பெற முடிந்தது.
தற்போது சசிகாந்த் செந்திலின் பணியை மிகப் பெரிய அளவுக்கு மாற்றியுள்ளது காங்கிரஸ் மேலிடம். அவரை லோக்சபா தேர்தலுக்கான வார் ரூம் தலைவராக நியமித்துள்ளால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே. அதாவது நாடு முழுமைக்குமான உத்திகளை வகுக்கும் மிகப்பெரிய பொறுப்பு சசிகாந்த் செந்தில் டீமுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நிர்வாக வார் ரூம் மற்றும் தகவல் தொடர்பு வார் ரூம் என இரு குழுக்களை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இதில் நிர்வாக வார் ரூமின் தலைவராக சசிகாந்த் செந்தில் செயல்படுவார். தகவல் தொடர்பு வார் ரூமின் தலைவராக வைபவ் வாலியா செயல்படுவார்.
சசிகாந்த் செந்தில் குழுவில், கோகுல் புடையில், நவீன் சர்மா, வருண் சந்தோஷ், அரவிந்த் குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அனைவரும் துணைத் தலைவர்களாக செயல்படுவார்கள்.
சசிகாந்த் செந்தில் தலைமையில் மத்திய வார் ரூம் அமைக்கப்பட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
{{comments.comment}}