சென்னை: நடிகர் விஜய் திடீர் என இன்று தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தியுள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சமீபகாலமாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல், கட்சி நிர்வாகிகளை வைத்து அன்னதானம் அளித்தல், நூலகம் அமைத்தல், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை சமீபகாலமாக செய்து வருகிறார்.
மேலும், லியோ பட வெற்றி விழாவில் விரைவில் அரசியில் பயணம் தொடங்க உள்ளது குறித்து பேசியது உள்ளிட்ட செயல்களின் மூலம் அவர் அரசியலில் ஈடுபடும் மன நிலையில் உள்ளதை வெளிப்படுத்தியது. இந்நிலையில், சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
வருகிற லோக்சபா தேர்தல் தொடர்பாக அவர்களுடன் விஜய் பேசியுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார் விஜய். கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். சுமார் 2மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பூத் கமிட்டிகளை வலுப்படுது்த வேண்டும் என மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தை முதலில் கட்சியாக மாற்ற நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் கட்சியை பதிவு செய்து விட்டு அதன் பின்னர் அறிவிப்புகளை வெளியிட அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஒரு மாதகாலத்தில் தனது மக்கள் இயக்கத்தை, அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}