தனக்கு 25.. கூட்டணிக் கட்சிகளுக்கு 15.. அதில் 5 தொகுதிகளில் "இலை".. அதிமுக கூட்டணி இறுதியானது?

Mar 03, 2024,05:43 PM IST

சென்னை: அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 25 தொகுதிகளில் அதிமுக போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாம். இது திமுக போட்டியிடுவதாக கூறப்படும் தொகுதிகளை விட அதிகமாகும்.


தமிழ்நாட்டில் தற்போது திமுக, அதிமுக, பாஜக தலைமையில் கூட்டணிகள் உருவாகின்றன. இதுதவிர நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் இப்போதைக்கு நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஏதாவது  கூட்டணியில் இணைந்தால் நான்கு முனையாக இது நீடிக்கும். ஒரு வேளை மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிட்டால், 5 முனைப் போட்டியாக அது மாறும்.


இதுதவிர அமமுக, ஓ.பி.எஸ் ஆகியோரின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகவில்லை. அனேகமாக பாஜக கூட்டணியில் இவர்கள் இணையலாம். அதற்கான வாய்ப்புகளே அதிகம் என்கிறார்கள்.


இதற்கிடையே, அதிமுகவில் யாருக்கு எத்தனை சீட் என்ற விவரம் லீக்காகியுள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல்கதான்.. ஆனால் இப்படித்தான் கூட்டணி இருக்கும் என்று நம்பப்படுகிறது. 




இதன்படி அதிமுக புதுச்சேரி உள்ளிட்ட 25  தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாம். (திமுக 20 அல்லது 21 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று ஏற்கனவே ஒரு டாக் உள்ளது). இதுதவிர கூட்டணிக் கட்சிகளான எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு திருநெல்வேலி, புரட்சி  பாரதம் கட்சிக்கு திருவள்ளூர் (தனி), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு மயிலாடுதுறை, தென்காசி (தனி) தொகுதி டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு அளிக்க அதிமுக தீர்மானித்துள்ளதாக சொல்கின்றனர்.


இந்த ஐந்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். அதன்படி பார்த்தால் இரட்டை இலை சின்னமானது 30 தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்புள்ளது.


இதுதவிர பாமகவுக்கு 6 முதல் 7 தொகுதிகள் வரையும், தேமுதிகவுக்கு 3 முதல் 4 தொகுதிகள் வரையும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாம். இந்த இரு கட்சிகளுக்கும் ராஜ்யசபா சீட் கிடைக்க வாய்ப்பில்லையாம். காரணம், அதிமுகவிடம் அதற்கான பலம் இல்லை என்பதால்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்