டெல்லி: லோக்சபா தேர்தல் வேட்பாளர் பட்டியலை முடிவு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் விடிய விடிய ஆலோசனை நடத்தியுள்ளனர். இதையடுத்து இன்று முதல் பட்டியலை பாஜக வெளியிடும் என்று பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல் பட்டியலில் குறைந்தது 100 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரது பெயர்கள் முதல் பட்டியலில் இடம் பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

லோக்சபா தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. அதற்கு முன்னதாக வேட்பாளர் பட்டியலை பாதியாவது அறிவித்து விட பாஜக தீவிரமாக உள்ளது. இதற்காக தீவிர தொடர் ஆலோசனைகளிலும் கட்சி மேலிடத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஹிந்தி பேசும் மாநிலங்களின் வேட்பாளர்கள்

முதலில் ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய தொடர் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கான வேட்பாளர்களை முதலில் அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த மாநில பாஜக தலைவர்களுடன் ஏற்கனவே இதுதொடர்பான ஆலோசனை முடிந்து விட்டது.
நேற்று பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் விடிய விடிய மாறி மாறி ஆலோசனை நடத்தினர். நள்ளிரவுக்கு மேல் தொடங்கிய ஆலோசனை அதிகாலை 4 மணியளவில்தான் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக இந்த மாநிலங்களுக்கான வேட்பாளர்களை இன்று மாலை வாக்கில் பாஜக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநிலங்கள் தவிர கேரளா, தெலங்கானா மாநில வேட்பாளர்களையும் பாஜக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு இப்போது வேட்பாளர் அறிவிப்பு இல்லை

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் இப்போதைக்கு முடிவு எடுக்க வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாம். இந்த மாநிலங்களில் இன்னும் கூட்டணிகள் உருவாகவில்லை. குழப்பம் நிலவுகிறது. இதனால் முடிவை தள்ளிப் போட்டிருக்கிறதாம் பாஜக.
பஞ்சாபில் அகாலிதளத்துடனும், தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்கிறதாம். மேலும் ஆந்திராவிலும் குழப்ப சூழலே நிலவுகிறது. ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகளுடனும் நட்பாக இருக்கிறது.. ஆனால் யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதி எது?

இன்றைய முதல் பட்டியலில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரின் தொகுதிகள் எவை என்பது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி அனேகமாக மீண்டும் வாரணாசி தொகுதியிலேயே போட்டியிடலாம் என்று தெரிகிறது. இந்தத் தொகுதியில் 2014 மற்றும் 2019 ஆகிய இரு தேர்தல்களில் போட்டியிட்டு வென்றவர் பிரதமர் மோடி.
2014 தேர்தலில் 3.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், 2019 தேர்தலில் 4.8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் பிரதமர் மோடி வெற்றி பெற்றார் என்பது நினைவிருக்கலாம். தற்போது 3வது முறையாக இதை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் மோடியை ஜெயிக்க வைக்க பாஜக தீவிரமாக உள்ளது.
வாரணாசி தொகுதியில் பிரதமருக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியிடக் கூடும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா போட்டி

உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியிலிருந்து போட்டியிடுவார். இந்த தொகுதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய், துணை பிரதமர் அத்வானி ஆகியோர் போட்டியிட்ட தொகுதியாகும். கடந்த 2019 தேர்தலில் இந்தத் தொகுதியில் அமித் ஷா போட்டியிட்டு வென்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சதுரயின் சவ்தாவை 5.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமித் ஷா வெற்றி பெற்றார்.
இவர்கள் தவிர அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோரின் பெயர்களும் இன்றைய பட்டியலில் இடம் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 10ம் தேதிக்குள் பாதி வேட்பாளர்களை அறிவித்த விட பாஜக ஆர்வம் காட்டுகிது. கடந்த 2019 தேர்தலிலும் கூட இதேபோலத்தான் அது செய்தது. மார்ச் 21ம் தேதிக்குள் அது 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அப்போது அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}