5 தர முன்வந்த அதிமுக. இறுதிக் கட்டத்தில் பேச்சு. விரைவில் தொகுதிப் பங்கீடு? எதிர்பார்ப்பில் தேமுதிக!

Feb 23, 2024,06:42 PM IST

சென்னை: மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக- தேமுதிக இடையே இறுதிக் கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் இந்தப் பேச்சுவார்த்தை முடிந்து கூட்டணி அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


யாருடன் கூட்டணி சேரும் தேமுதிக.. விஜயகாந்த் இல்லாத நிலையில் தேமுதிகவின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்.. லோக்சபா தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.  இதற்கு முன்னதாக தங்கள் கூட்டணி கட்சியோடு முக்கிய கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. 




ஆனால், அதிமுக மற்றும் பாஜக இன்னும் கூட்டணியை இறுதி செய்யாத நிலையே உள்ளது.  இருவரும் இந்த முறை தனித்தனியாக போய் விட்டனர். ஆனால் இவர்களது கூட்டணி இன்னும் முடிவாகாமலேயே இழுத்துக் கொண்டிருக்கிறது. பாமக, தேமுதிக நிலைப்பாடுதான் பெரும் குழப்பமாக உள்ளது.




14 மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கொடுத்தால் கூட்டணி என அறிவித்திருந்தார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா. அவ்வாறு தராவிட்டால் தேமுதிக தனித்து போட்டியிடும் என்றும் பிரேமலதா தெரிவித்திருந்தார். ஆனால் திடீர் என தாம் அப்படி சொல்லவே இல்லை எனவும் அந்தர்பல்டி அடித்தார் பிரேமலதா. இருப்பினும் அதிமுக மற்றும் பாஜக தங்களால் இத்தனை தொகுதி தரமுடியாது என மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக தேமுதிக  கூட்டணியை இறுதி செய்யாமல் இருந்து வந்தது.


தேமுதிகவினரைப் பொறுத்தவரை பாஜகவை விட, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதிமுகவால்தான் நமக்கு அங்கீகாரம் கிடைத்தது. எனவே அதிமுகவுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும் என்பது அக்கட்சியினரின் வாதமாக உள்ளது. சீட் விவகாரத்தில் பிடிவாதம் காட்டாமல் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால்  தேமுதிக தரப்பிலிருந்தே அதிமுகவைத் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.




அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் நேற்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. தேமுதிக 10 தொகுதிகள் கேட்டதாகவும் அதற்கு 5  தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகவும் நம்பத் தகுந்த கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. தற்போது அதில் ஒன்றை அதிகரித்து 5 தொகுதிகள் தர அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பிரேமலதா விஜயகாந்த் ஒத்துக் கொண்டால் கூட்டணி முடிவாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்