Election 2024: பூத்தில் கூட்டமா இருக்கா?.. வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்கலாம்.. சூப்பர் வசதி அறிமுகம்!

Apr 19, 2024,10:52 AM IST

சென்னை:  வாக்குச் சாவடியில் கூட்டம் எப்படி இருக்கிறது, எத்தனை பேர் வரிசையில் காத்திருக்காங்க என்ற விவரத்தை அறிய தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்தபடியே  பூத்தில் இருக்கும் கியூவை அறிந்து கொண்டு அதற்கேற்ப வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லலாம்.


இந்தியாவில் மக்களவைத் தேர்தல் திருவிழா நாளை தொடங்குகிறது. 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியும் அடக்கம்.


வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. வாக்குச் சாவடிகளில் அந்தந்த தேர்தல் பணியாளர்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். விடிந்தால் கல்யாணம் என்பது போல நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும். மாலை 6 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறும். இந்த நிலையில் பல்வேறு வசதிகளை வாக்காளர்களுக்காக தொடர்ந்து செய்து வருகிறது தேர்தல் ஆணையம் .


வரிசையில் எத்தனை பேர் காத்திருக்காங்க?




வாக்காளர்கள் தத்தமது வாக்குச் சாவடியில் எத்தனை பேர் வாக்களிக்க வரிசையில் நிற்கிறார்கள், கியூ பெரிதாக இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து அறிய புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளத்துக்குப் போய் பூத்தில் உள்ள கூட்ட நெரிசல் குறித்து அறிந்து கொள்ளலாம். 


இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறுகையில், வாக்காளர்களின் வசதிக்காக மக்களவை தேர்தல் 2024க்காக வாக்குச்சாவடியின் வரிசை நிலை அறிந்து கொள்ளும் வசதியை தேர்தல் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.


பூத் ஸ்லிப் வேண்டுமா?.. இதை பயன்படுத்துங்க


பலருக்கு பூத் ஸ்லிப் கிடைத்திருக்காது. இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருப்பதுதான் முக்கியம். வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்கிறதா என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப நமது வாக்குச் சாவடி குறித்த விவரத்தையும் அறிய  https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி பூத் ஸ்லிப் குறித்த தகவல்களைப்  பெற முடியும்.


ஓட்டுப் போடுங்க.. அப்படியே செல்பியும் எடுங்க




மறுபக்கம் சென்னை மாநகராட்சி ஒரு சூப்பர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள அணைத்து வாக்கு சாவடிகளிலும் Selfie Booth-கள் வைக்கப்பட்டுள்ளன. "Vote போடுங்க.. Selfie எடுத்து Post போடுங்க!" கூடவே  @chennaicorp Tag பண்ணுங்க என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


பிறகென்ன ஜாலியா போய் ஓட்டுப் போட்டுட்டு அப்படியே ஜம்முன்னு ஒரு செல்பியையும் எடுத்து போட்டு விடுங்க.. உங்களைப் பார்த்து நாலு பேருக்கும் ஓட்டுப் போடும் ஆசை வரும் இல்லையா.. !


தேர்தல் திருவிழாவை அமர்க்களமாக கொண்டாடுங்க மக்களே.. மறக்காமல் ஓட்டுப் போடுங்க.. ஜனநாயகத்தை வலுப்படுத்துங்க!

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்