பிரதமருக்கு சாம்பார் ரொம்பப் பிடிச்சிருக்கு போல.. அதான் அடிக்கடி வர்றார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன்

Mar 03, 2024,05:43 PM IST

ஈரோடு: பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டு சாம்பார் ரொம்பப் பிடிச்சுப் போச்சு போல. அதுதான் அடிக்கடி வருகிறார். அவர் எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது. இந்தத் தேர்தலோடு அவரும் காணாமல் போய் விடுவார் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு விரைவில் முடிவடையும் சூழல் உருவாகியுள்ளது. விரும்பிய தொகுதிக்காக காங்கிரஸ் விடாமல் போராடுவதாலும், அதைக் கொடுப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாலும், திமுக தயங்குகிறது. இதன் காரணமாக உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் நிலவுவதாக தெரிகிறது. அதேசமயம், கூட்டணி இறுதியானது என்பதை ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உறுதிபடக் கூறியுள்ளார்.




இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் அடிக்கடி தமிழ்நாடு வருவதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. அவருக்கு நம்ம ஊர் சாம்பார் பிடிச்சு போச்சு போல. அதான் அடிக்கடி வருகிறார். எத்தனை முறை வந்தாலும் மக்களை வெல்ல முடியாது. இந்தத் தேர்தலோடு அவரே காணாமல் போய் விடுவார்.


விஜயதரணி வெளியேறியதெல்லாம் நல்லதுதான். கெட்ட சக்தி காங்கிரஸை விட்டு வெளியேறியுள்ளது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இது கட்சியை தூய்மைப்படுத்தும். இது போல வெளியேறுகிறவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.


பாஜக வேட்பாளர்கள் பட்டியல் குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஜெயிக்காதவர்களைத் தேர்ந்தெடுத்து, ஜெயிக்க முடியாத தொகுதிகளுக்கு வேட்பாளர்களாக்கி அதை அறிவித்துள்ளனர். எங்குமே அவர்களால் ஜெயிக்க முடியாது. தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியும், செல்வாக்கு இருக்கிறது என்றால் மத்திய நிதியை அள்ளிக் கொடுத்திருப்பார்களே.. ஆனால் கொடுக்கவில்லையே என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.



சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்