Loksabha Elections 2024: அதிமுகவா.. பாஜகவா.. எந்தப் பக்கம் போகும் பாமக, தேமுதிக?

Jan 28, 2024,06:08 PM IST

சென்னை: அதிமுக - பாஜக மோதலால் சில கட்சிகள் திரிசங்கு சொர்க்க நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. எந்தப் பக்கம் போவது என்பதில் அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.


2019 லோக்சபா தேர்தலின்போது தெளிவான அணிகள் அரசியல் களம் கண்டன. திமுக தலைமையில் 9 கட்சிகள் இணைந்து வலுவான முறையில் களம் கண்டன. மறுபக்கம் அதிமுக தலைமையில்  7 கட்சிகள் திரண்டு இன்னொரு முனையில் நின்றன. வழக்கம் போல நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் தனித்துக் களம் கண்ட நிலையில் அமமுக கட்சி ஒரு குட்டிக் கூட்டணியை அமைத்து தேர்தலைச் சந்தித்திருந்தது.


இத்தனை பேர் தேர்தலில் போட்டியிட்டாலும் கூட திமுக கூட்டணி சிந்தாமல் சிதறாமல் வெற்றியைத் தட்டிக் கொண்டு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் தேனி தொகுதியைத் தவிர மற்ற 38 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தேனியில் அதிமுக வென்றது. நடக்கப் போகும் லோக்சபா தேர்தலில் திமுக அணியில் மட்டும்தான் பெரிய மாற்றம் இல்லை, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியைத் தவிர மற்ற  கட்சிகள் அப்படியே கூட்டணியில் நீடிக்கின்றன.




மறுபக்கம் அதிமுக கூட்டணி நெல்லிக்காய் கட்டு அவிழ்ந்தது போல சிதறிப்போய்க் கிடக்கிறது. பாஜகவை கூட்டணியை விட்டு அதிமுக நீக்கி விட்டது. அதிமுகவின் முக்கியத் தலைவராக விளங்கி வந்த ஓபிஎஸ் இப்போது அங்கு இல்லை. பாமக, தேமுதிக ஆகியவை கூட்டணியில் இருக்கிறதா என்று தெரியவில்லை.  இந்த இரு கட்சிகளும் அதிமுக - பாஜக ஆகிய கட்சிகளிடமிருந்து சம தொலைவை கடைப்படித்து வருகின்றன.


புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை பாஜக பக்கம் போக அதிக வாய்ப்புகள் உள்ளன. மிச்சம் இருக்கும் பாமக, தேமுதிக என்ன செய்யப் போகின்றன என்று தெரியவில்லை. தேமுதிகவை தன் பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருதெல்லாம் அறிவித்திருக்கிறது மத்திய பாஜக அரசு. அதேபோல விஜயகாந்த்துக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி நீளமான அறிக்கையும் கூட வெளியிட்டிருந்தார்.




தேமுதிகவைப் பொறுத்தவரை திமுக பக்கம் ஒதுங்கலாம் என்பதுதான் கட்சிக்காரர்களின் உள்ளூர  ஆசையாக உள்ளது. ஆனால் பாஜக பக்கமிருந்து அதிக நெருக்குதல்கள் இருப்பதால் வேறு வழியில்லாமல் அந்தப் பக்கம்தான் போக வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது. பாஜகவை பகைத்துக் கொண்டு அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து தேமுதிக பேசுமா என்பதும் சந்தேகம்தான். 


பாமகவைப் பொறுத்தவரை பாஜகவையும் பகைத்துக் கொள்ள முடியாது.. அதேசமயம், பாஜகவுடன் மட்டும் கூட்டணி சேர்ந்தால் ஜெயிப்பதில் உள்ள சிரமங்களையம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்பதால், சிக்கலும் இருக்கிறது. அதிமுகவுடன் சேர்ந்தாலாவது சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நினைத்துப் பார்க்க முடியும் என்பதால் எந்தப் பக்கம் போவது என்பதில் அக்கட்சி குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.




திமுக பக்கம்தான் போக வேண்டும் பாமகவிலும் பலருக்கு ஆசை உள்ளது. திமுக பக்கம் போனால் கண்டிப்பாக போட்டியிடும் தொகுதிகளில் வெல்ல முடியும், அரசியலில் மேலும் பலத்துடன் திகழ முடியும் என்றாலும் கூட திமுகவில் இப்போது நோ வெகன்சி போர்டு வைக்காத குறையாக ஹவுஸ்புல்லாக உள்ளது.


திமுகவிலிருந்து எந்தப் பெரிய கட்சியும் வெளியில் போக வாய்ப்பில்லை. கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் கூட திமுக கூட்டணி நிச்சயம் இப்போது உள்ளது போல தொடரும் என்பதால் அங்கு புதிய கட்சிகளுக்கு இடம் என்பது மிக மிக வாய்ப்பு குறைவுதான்.


இப்படிப்பட்ட நிலையில், பாமக, தேமுதிகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்.. பாஜக பக்கம் போகுமா அல்லது அதிமுகவுடன் தங்குமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்பது இந்த நொடி வரை குழப்பமாகவே உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்