தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 72.09 சதவீத வாக்குகள் பதிவு.. சர்ப்பிரைஸ் கொடுத்த சென்னை!

Apr 19, 2024,08:53 PM IST
சென்னை: முதல் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று 6 மணியுடன் முடிவுக்கு வந்த நிலையில் டோக்கன் கொடுத்து வாக்காளர்கள் வாக்களித்து வரும் நிலையில் இரவு 7 மணி வரை தமிழ்நாட்டில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு, புதுச்சேரியில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தேர்தல் முடிவடைந்தது. 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் வந்து வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதேபோல விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

சென்னையில் வாக்குப் பதிவு  ஆரம்பத்தில் மந்தமாக இருந்தது. இருப்பினும் தட்டித் தடவி வாக்குப் பதிவு அதிகரித்து தற்போது கடந்த முறையை விட சற்று கூடுதலான வாக்குப் பதிவு நடைபெற்று சென்னை வாக்காளர்கள் சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளனர். கடந்த ஆண்டை விட 10 சதவீத அளவுக்கு சென்னையில் வாக்குப் பதிவு அதிகரித்துள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, கரூர் உள்ளிட்ட பல தொகுதிகளில் அதிக அளவிலான வாக்குப் பதிவு இருந்தது.




இரவு 7 மணி வரை மக்களவைத் தொகுதி வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் விபரம் வருமாறு:

75 சதவீதத்திற்கு மேல் - 2 தொகுதிகள்

கள்ளக்குறிச்சி 75.67
தர்மபுரி 75.44

70 சதவீதத்திற்கு மேல் - 31 தொகுதிகள்

சிதம்பரம் (தனி) 74.87
பெரம்பலூர் 74.46
நாமக்கல் 74.29
கரூர் 74.05
அரக்கோணம் 73.92
ஆரணி 73.77 
சேலம் 73.55
விழுப்புரம் (தனி) 73.49
திருவண்ணாமலை 73.35
வேலூர் 73.04
காஞ்சிபுரம் (தனி) 73.04
கிருஷ்ணகிரி 72.96
கடலூர் 72.40
விருதுநகர் 72.29
பொள்ளாச்சி (தனி) 72.22
நாகப்பட்டினம் (தனி)  72.21
திருப்பூர் 72.02
திருவள்ளூர் (தனி) 71.87
தேனி 71.74
மயிலாடுதுறை 71.45
ஈரோடு 71.42
திண்டுக்கல் 71.37
திருச்சிராப்பள்ளி 71.20
கோயம்புத்தூர் 71.17
நீலகிரி (தனி) 71.07
தென்காசி (தனி) 71.07
சிவகங்கை 71.05
ராமநாதபுரம் 71.05
தூத்துக்குடி 70.93
திருநெல்வேலி 70.46
கன்னியாகுமரி 70.15

70 சதவீதத்திற்கும் கீழ் வாக்குகள் பதிவான தொகுதிகள் - 6 தொகுதிகள்

தஞ்சாவூர் 69.82
ஸ்ரீபெரும்புதூர் 69.79
வட சென்னை 69.26
மதுரை 68.98
தென் சென்னை 67.82
மத்திய சென்னை 67.35

புதுச்சேரி:  75%

விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தல்: 56.68%

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்