2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. 13 மாநிலங்கள், 89 தொகுதிகளில்.. இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது!

Apr 24, 2024,11:27 AM IST

டெல்லி: 13 மாநிலங்களைச் சேர்ந்த 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 26ம் தேதி 2ம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. இன்று மாலை 6 மணியுடன் இங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.


இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் திட்டமிடப்பட்டது. இதில்  தமிழ்நாடு,புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 102 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல்  26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.




இதில் கேரளாவில்  மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 13 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 7 தொகுதிகள், அசாமில் 5 தொகுதிகள், பீகாரின் 5 தொகுதிகள், சத்தீஸ்கரில் 3 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகள், மணிப்பூர், திரிபுரா மற்றும் ஜம்மு, காஷ்மீரில் தலா ஒரு தொகுதி ஆகிய 89 தொகுதிகளில் ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 


இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரப் பணியில் பல்வேறு கட்சியைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக செயல்பட்டு  வருகின்றனர். இந்த அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இன்று மாலை 6:00 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. அதன் பிறகு பிரச்சாரம் செய்ய அனுமதி கிடையாது.


2ம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் இறுதிக்கட்ட பணியில் பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரித்துள்ளனர். இங்கெல்லாம் தற்போது உச்சகட்ட இறுதிப்பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்