வாவ்.. ரத்தக்கறையுடன் பார்த்த நம்ம லோகேஷ் கனகராஜா இது.. இனிக்க வைக்கும் "இனிமேல்"

Mar 25, 2024,07:21 PM IST

- அஸ்வின்


சென்னை: சற்றுமுன் வெளியான இனிமேல் பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிரட்டியிருக்கிறார். ரத்த வெறியான காட்சிகளை வைக்கும் லோகேஷ் கனகராஜா இது என்று ஆச்சரியப்படுத்தியுள்ளார்.


ஒரு இயக்குனராக ஏற்கனவே தன் முத்திரையை பதித்து விட்டவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய அனைத்து படங்களிலும் வயலன்ஸ் ரத்தக்கறையுடன் காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கும். அவர் படத்தில் ஒரு ரொமான்ஸ் காட்சிகளுக்கும் அவர் இடம் கொடுத்திருக்க மாட்டார். ஏன் ஹீரோயினே இல்லாமல் அவர் கைதி திரைப்படத்தை இயக்கியிருப்பார். அந்த திரைப்படத்தில் கைதியாக வரும் கார்த்தி அவர்களின் கதாபாத்திரமும் போலீசாக வரும் நரேன் கதாபாத்திரம் மட்டுமே மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும்.




மாஸ்டர் திரைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் அவர்களின் கதாபாத்திரமும் அர்ஜுன் தாஸ் அவர்களின் கதாபாத்திரமும் பயங்கரமாக இடம் பெற்றிருக்கும். விக்ரம் திரைப்படத்தில் கூட கமல்ஹாசனை ஹாலிவுட் தரத்தில் காட்டியிருப்பார். அந்த திரைப்படத்திலும்  கூட ஒரு ரொமான்ஸ் காட்சி கூட இடம்பெற்று இருக்காது. இப்படியே பார்த்துப் பழக்கப்பட்ட லோகேஷ்தான் தற்போது அவர் நடித்துள்ள இனிமேல் ஆல்பத்தில் நேர்மாறாக காட்சி தருகிறார். 


பாடல் முழுவதும் அவர் இளமை துள்ளலுடன் இருக்கிறார். இளமை நிரம்பி வழிகிறது. கல்லுக்குள் ஈரம் என்று சொல்வதைப் போல அவருக்குள் இப்படி ஒரு பரிமாணமா என்று நம்மை அனைவரையும் ஆச்சரியத்துடன் பார்க்க வைத்துள்ளார்.  கமல்ஹாசன் தயாரித்துள்ள இந்த ஆல்பத்தில் சுருதிஹாசன் பாடல் பாடி, இசையமைத்து நடித்துள்ளார். இந்த பாடலையும் அவரே இயக்கியுள்ளார். பாடலை எழுதியவர் கமல்ஹாசன்.




பாட்டை திரும்பத் திரும்ப கேட்கலாம் போல இருக்கிறது. லோகேஷ் - சுருதி ஹாசன் காம்பினேசன் முற்றிலுமாக ஒரு இளமை துள்ளலாக இருக்கிறது. கமல்ஹாசனை நம்மால் என்றுமே அளவிட முடியாது. ஏனென்றால் அவர் மிகவும் இனிமையானவர், திறமையான படைப்பாளி.. ஒருவருக்குள் இருக்கும் திறமையை தூக்கிக் கொண்டு வெளியே வந்து கொடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அதுக்கு இந்த இனிமேல் பாடலும் ஒரு எடுத்துக்காட்டு. இளைஞர்களை கவருவதற்கு புதிய புதிய விஷயங்கள் வரவேண்டும், புதிய புதிய விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதற்கு லோகேஷ் அவர்களும் கமல் அவர்களும் ஒரு எடுத்துக்காட்டு.


விக்ரம் படம் மட்டுமே இவர்களது கூட்டணியின் வெற்றியாக இருந்தது. தற்போது இனிமேல் பாடலும் அந்த வெற்றியில் இணைந்து இருக்கிறது. ரசித்து ரசித்து பார்க்கலாம், ரசிக்க ரசிக்க தூண்டும். ரசிப்பு என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த இனிமேல் பாடல் தொகுப்பு. லோகேஷ்  தற்பொழுது ரஜினிகாந்த்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கான முழு தீவிரமான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு நடுவே இந்த பரிமாணத்தையும் அவர் காட்டிவிட்டுப் போயுள்ளார். இது பிரமிப்புடன் பார்க்க வைக்கிறது. 




லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படத்தில் இறுதி காட்சியில் கமல்ஹாசன் குரல் கொடுத்திருப்பார். இப்போது இந்தப் பாடலிலும் கூட கமல்ஹாசனின் குரல் கடைசி வரிகளாக வருகிறது,. லோகேஷின் இயக்கத்தில்  2 அதிரடியான படங்களில் நடித்து மிரட்டிய விஜய் தளபதி 69 படத்துடன் முழுநேர அரசியலில் இறங்கும் நிலையில் மறுபக்கம், லோகேஷ் கனகராஜ் நடிகராக அவதாரம் எடுப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.


சமீபத்தில் இயக்குநர் பிரதிப் ரங்கநாதன் ஒரு இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் உருவெடுத்து இருக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை எப்படி கதாநாயகனாக ரசித்தோமோ அதேபோல இப்போது லோகேஷுமம் புதிய நாயகனாக உருவெடுத்துள்ளார். அதுவும் தனது குருவின் தயாரிப்பில்.. லோகேஷ்.. இன்னும் என்னென்ன ஆச்சரியத்தை நிகழ்த்தப் போகிறார், கமலுடன் இன்னும் என்னென்ன அதிசயத்தை நிகழ்த்தப் போகிறார் என்று நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்