சென்னை: கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் மக்களுக்கு பயன் தரும் வகையில் மலிவு விலை உணவகம் மற்றும் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் பிகே சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் புறநகர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மிகப்பெரிய கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டது. இதற்கு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டது. பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல பேருந்து நிலையத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சென்னை பெருநகர போக்குவரத்து குழுமம் அவ்வப்போது ஒவ்வொரு நடவடிக்கையாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து நிலையத்தில் மக்கள் பயன் பெறும் வகையில் பல நல்ல மாற்றங்களை தமிழக அரசு மற்றும் சிஎம்டிஏ ஆகியவை இணைந்து செயல்படுத்தி வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.14.30 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையத்திற்கு அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மலிவு விலை உணவகம் வெகு விரைவில் தரமான முறையில் அமைக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் கிளாம்பாக்கத்தில் சலுகை விலையில் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவர்களின் வாழ்வாதரத்திற்கு வழி செய்யப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து பணிகளும் துரிதமாக செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் திட்டமிடப்படாத திட்டங்களை இந்த ஆட்சியில் தான் திட்டமிட்டு பல பணிகளை செய்து வருகிறோம். முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணிகள் ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெறும். பேருந்து நிலையத்தில் 35 நாட்களுக்குள் தேவையான 90 சதவீத அடிப்படை வசதியை செய்துள்ளோம்.
வெகு விரைவில் மக்களுக்கு பயன் தரும் வகையில் ஏடிஎம் மையங்கள் ஒன்று அல்ல 3, 4 அமைக்கப்படும். பல வங்கிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். அதை பரிசீலித்து நல்ல முறையில் பணி செய்பவர்களுக்கு ஏடிஎம் மையம் வைக்க அனுமதி அளிக்கப்படும் என்றார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}