வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு..அடுத்த சில நாட்களுக்கு மழை இருக்கும்!

May 07, 2023,04:33 PM IST
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாலும், அது வலுவடைந்து மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக மாறவுள்ளதால், அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:

தென் மேற்கு வங்கக் கடலில்உருவாகியுள்ள குறைந்த காற்றவுத்தத் தாழ்வுப் பகுதியானது, வட தமிழ்நாட்டு கடலோரப் பகுதிக்கு அருகே நிலை கொண்டுள்ளது.  இது மேலும் வலுவடைந்து மே 9ம் தேதி வாக்கில் காற்றழுத்தமாக மாறக் கூடும். அதன் பிறகு இது புயலாக மாறி மத்திய வங்கக் கடல் நோக்கி நகரும். இது நகரும் பாதையைப் பொறுத்து தமிழ்நாட்டுக்கான தாக்கம் தெரியவரும். தொடர்ந்து இந்த புயல் சின்னம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.




புயல் சின்னம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. 
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வாலாஜா, காஞ்சிபுரம், திருப்பத்தூர், கலசப்பாக்கம், ராணிப்பேட்டை, செய்யார் உள்ளிட்ட வட தமிழ்நாட்டுப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கான மழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைப் பொழிவுக்கான வாய்ப்பு உள்ளது. இதில் 7 மற்றும் 8ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகரம் மேகமூட்டமாக காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

வங்கக் கடலில்  மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால்  மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே அக்னி நட்சத்திரம் தொடங்கியும் கூட ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வெப்பத் தாக்கம் குறைவாகவே இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் மேலும் 5 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என்பதால் மக்கள் இரட்டிப்பு சந்தோஷத்தை அடைந்துள்ளனர்.


சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்