வங்கக் கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களுக்கு மிக கன மழைக்கு வாய்ப்பு!

May 22, 2024,10:43 AM IST
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்தது போல் தென்மேற்கு, அதனை ஒட்டிய மத்திய வங்க கடலில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் அதாவது மே 24ஆம் தேதி மத்திய வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். மேலும் இந்த  தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இதுவரை எந்த தகவலையும் வானிலை மையம் உறுதி கூறவில்லை.



இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒருவேளை வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தால் தமிழ்நாட்டிற்கு மழைக்கு வாய்ப்புள்ளது. ஆனால் இது தமிழகத்தை விட்டு விலகிச் செல்வதால் வரும் நாட்களில் மழையின் தீவிரம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இருப்பதால் இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை  பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மே 24ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தெற்கு கேரளா பகுதிகளிலும், தென் தமிழகப் பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!

news

இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு

news

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்

news

ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!

news

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?

news

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

news

தாத்தா (கவிதை)

அதிகம் பார்க்கும் செய்திகள்