- மஞ்சுளா தேவி
சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் உருவாக வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரியில் 7நாளைக்கு மழை நீடிப்பதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை தீவிரமடைந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. ஏற்கனவே இரண்டு காற்று சுழற்சிகள் உருவான நிலையில் , தற்போது வரும் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் உருவாக வாய்ப்பு உள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 26 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். அது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகரும். பின்னர் 27ஆம் தேதியி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக அந்தமான் தீவுகளில் 26, 27 ,28 ,ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று மழை நிலவரம்:
சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும்.
கேரளாவில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
ஊட்டி மலை ரயில் சேவை ரத்து:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது .இதன் காரணமாக வரும் டிசம்பர் 7ஆம் தேதி வரை உதகை டூ மேட்டுப்பாளையம் இடையே செல்லும் மலை ரயில் சேவையும், வரும் 30ஆம் தேதி உதகை டூ குன்னூர் இடையே செல்லும் மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}