கே.எல். ராகுலை இப்படியா திட்டுவது.. விமர்சனத்துக்குள்ளான LSG ஓனர்.. நடவடிக்கை எடுக்குமா பிசிசிஐ?

May 09, 2024,05:36 PM IST

ஹைதராபாத்: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் படு தோல்வியைத் தொடர்ந்து மைதானத்திலேயே வைத்து அதன் கேப்டன் கே.எல். ராகுலிடம் கடுமையான முறையில் பேசிய அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை பலரும் கண்டித்துள்ளனர். இது தவறான செயல். இதை எப்படி பிசிசிஐ அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச வீரரான கே.எல். ராகுலை இப்படி பல்லாயிரக்கணக்கானோர் கூடிய இடத்தில் பொது வெளியில் வைத்து கடுமையான முறையில் பேசியது தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


ஐபிஎல் 2024 போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த போட்டி அனைவரையும் அதிர வைத்து விட்டது. காரணம், ஹைதராபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்ற விதம்தான்.


பரிதாப லக்னோ - பயங்கர ஹைதராபாத்




முதலில் ஆடிய லக்னோஅணி 20 ஓஏவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்தது.  இத்தனைக்கும் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு நேற்று அவ்வளவு சூப்பராக இல்லை. நடராஜனுக்கு நேற்று விக்கெட்டே கிடைக்கவில்லை. ரன்களையும் அள்ளிக் கொடுத்தார். அடித்து நொறுக்கி ரன்களைக் குவித்திருக்கலாம். ஆனாலும் லக்னோ அணியால் மிகப் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.


பவுலிங்கில் ஹைதராபாத் அணியை முடக்கி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்த லக்னோவின் நினைப்பில் கங்கை அள்ளிப் போட்டு விட்டது ஹைதராபாத் அணியின் சேசிங். லக்னோ அணி மட்டுமல்ல, போட்டியைப் பார்த்த அத்தனை பேருமேதான் அதிர்ந்து போய் விட்டனர் ஹைதராபாத்தின் புயல் வேக சேசிங்கைப் பார்த்து. ஜஸ்ட் 9.4 ஓவர்களில் அதாவது வெறும் 58 பந்துகளில் 166 ரன்களைக் குவித்து அதிரடியான வெற்றியைப் பெற்று அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டது ஹைதராபாத். இது வரலாறு காணாத வெற்றி.


மும்பை இந்தியன்ஸுக்கு சேர்த்து ஆப்பு




ஒரு விக்கெட்டையும் பறி கொடுக்காமல் ஹைதராபாத் நடத்திய இந்த துவம்சமான ஆட்டம், லக்னோ அணிக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்து விட்டது. அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 75 ரன்களும், டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 89 ரன்களைக் குவித்து அதகளம் செய்து விட்டனர். இந்த அதிரடியான வெற்றியால் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத்தான் மிகப் பெரிய நஷ்டம் நேற்று.. அதாவது போட்டித் தொடரை விட்டு அந்த அணி வெளியேற்றப்பட்டு விட்டது. இந்தத் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே மும்பை வென்றுள்ளது. இன்னும் 2 போட்டிகள்தான் அந்த அணிக்கு உள்ளது. அதில் அவர்கள் 12 புள்ளிகளைப் பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். ஆனால் அது கனவில் கூட முடியாது என்பதால் மும்பை வெளியேறியுள்ளது. 


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. நேற்றைய போட்டி முடிவில் லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ராகுலுடன் பேசிய விதம்தான் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மைதானத்திலேயே வைத்து கடுமையான முறையில் ராகுலுடன் வாதிட்டார் கோயங்கா. அவர் வாதாடிய விதத்தைப் பார்த்தபோது திட்டினாரா அல்லது கடுமையான சொற்களைப் பயன்படுத்தினாரா என்று தெரியவில்லை. ஆனால் ராகுலின் முகம் இறுகிப் போயிருந்ததைப் பார்க்க முடிந்தது. தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு மிகப் பொறுமையாக தலையாட்டிக் கொண்டும் பதிலளித்துக் கொண்டும் இருந்தார் ராகுல்.


சஞ்சீவ் கோயங்காவின் செயலால் முகம் சுளிப்பு




பல  நூறு கேமராக்கள் உள்ளனர், மைதானத்தில் பல ஆயிரம் பேர் உள்ளனர்.. எல்லோரும் பார்க்கிறார்கள் என்ற உணர்வே இல்லாமல் கோயங்கா அவர் இஷ்டத்திற்குப் பேசிக் கொண்டிருந்தார். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக போட்டி முடிவு குறித்து டிரஸ்ஸிங் ரூமிலோ அல்லது தனியாக அழைத்தோ தான் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் கேப்டனிடம் பேசுவார்கள். ஆனால் அப்படி இல்லாமல் பொது வெளியில் வைத்து இப்படி காச் மூச் என்று பேசியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தவறான செயல், கண்டிப்பாக இதை பிசிசிஐ அனுமதிக்கக் கூடாது, லக்னோ அணி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வீரர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்படும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


அத்தோடு, கே.எல். ராகுல் உடனடியாக லக்னோ அணியை விட்டு வெளியேற வேண்டும். ராகுல் ஒரு சர்வதேச வீரர், சிறந்த பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பர். அவருக்கு இது மிகப் பெரிய அவமானம். தன்மானம்தான் முக்கியம். எனவே ராகுல் உடனடியாக அந்த அணியை விட்டு வெளியேற வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சஞ்சீவ் கோயங்காவின் செயல் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய.. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மரணமடைந்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

அறுதப் பழசான ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி.. அதிர வைக்கும் தகவல்கள்!

news

மே 20 - சந்தோஷம் தரும் வைகாசி சோமவார பிரதோஷம்

news

Friendship Marriage: காதலும் கிடையாது.. காமமும் கிடையாது.. ஜப்பானில் இப்படியும் கல்யாணம் நடக்குது!

news

சார்லஸ் மன்னரை விட பெரும் பணக்காரர்களான.. பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக், மனைவி அக்ஷதா மூர்த்தி

news

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர்... விபத்துக்குள்ளானது.. மீட்புப் படைகள் விரைந்தன!

news

3 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்.. 21ம் தேதி 24 மாவட்டங்களில் சூப்பர் மழை.. வானிலை மையம்!

news

தோனி விக்கெட்டை வீழ்த்தியதை பெங்களூரு கொண்டாடியிருக்கக் கூடாது - மைக்கேல் வாகன்

news

அந்தமானில் தொடங்கியது தென் மேற்குப் பருவ மழை.. 3 நாட்களுக்கு முன்பாகவே வந்து சேர்ந்தது!

அதிகம் பார்க்கும் செய்திகள்