டெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பொறியியல் துறையில் முன்னணி வகிக்கும் ஒரு பெரிய நிறுவனம் L&T. இந்த நிறுவனத்தில் சுமார் 6000த்திற்கு அதிகமான பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தனது பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் L&T நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்என். சுப்பிரமணியன் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறை குறித்த முழுமையான தகவலை இன்னும் அந்த நிறுவனம் வெளியிடவில்லை. இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று L&T நிறுவனம் அறிவித்துள்ளது.அதோடு இந்த புதிய பாலிசி L&Tன் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்இணை நிறுவனங்களான பைனான்சியங் செக்டர் மற்றும் தொழில்நுட்ப செட்டர்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் இதே போன்ற விடுமுறை பாலிசியை உணவு டெலிவரி துறையில் இருக்கும் ஸ்விகி மற்றும் சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் 2020ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்றன. இதற்கு முன்னர் வாரத்திற்கு 90 மணி நேரம் பணி செய்ய வேண்டும் எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்திய L&T நிறுவனத்தின் தலைவர் எஸ்என்.சுப்பிரமணியன் தான் தற்போது இந்த விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}