Lunch tips: கத்தரிக்காய் பீர்க்கங்காய் கொத்சு.. சூப்பரான சைட் டிஷ்

Jul 21, 2025,02:50 PM IST
- ஸ்வர்ணலட்சுமி

தினமும் என்ன சமையல் செய்யலாம் என்று யோசனையில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு சட்டென ஈஸியான சுவையான இட்லி, தோசைக்கும், சாதத்திற்கும் ஏற்ற ஒரே டிஷ் ...எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.. வாருங்கள் கிச்சனுக்குள் போகலாம்...

தேவையான பொருட்கள்:

1. பீர்க்கங்காய் நார் நீக்கி கட் செய்தது ஒரு கப்
2. கத்தரிக்காய் கழுவி கட் செய்தது ஒரு கப்
3. சிறிய வெங்காயம் 10
4. பூண்டு 10
5. வர மிளகாய் ,பச்சை மிளகாய் தலா இரண்டு குறிப்பு :.காரம் தேவைக்கு ஏற்ப.
6. சீரகம் ஒரு ஸ்பூன்
7. தக்காளி நான்கு
8. கருவேப்பிலை மல்லித்தழை ஒரு கைப்பிடி
9. நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன்
10. தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்

செய்முறை:



ஒரு குக்கரில் கட் செய்த கத்தரிக்காய் ,பீர்க்கங்காய், சிறிய வெங்காயம் ,பூண்டு, வர மிளகாய் ,பச்சை மிளகாய் ,சீரகம், தக்காளி கழுவி கட் செய்தது.

இவை அனைத்தும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி (தேவைக்கு ஏற்ப) கால் ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை குக்கரில் வேக வைக்கவும்.

குக்கர் பிரஷர் அடங்கியதும் வேகவைத்த கலவையை கருவேப்பிலை மல்லி தழை சேர்த்து மிக்ஸியில் பல்ஸ் மோடில் அரைக்கவும். உப்பு தேவைக்கு ஏற்ப சேர்க்கவும்.

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு ,உளுத்தம் பருப்பு, சீரகம் ,வரமிளகாய், கருவேப்பிலை அதனுடன் இரண்டு சின்ன வெங்காயம் ,இரண்டு பூண்டு தட்டிக் கொண்டு சேர்க்கவும். (குறிப்பு: தாளிப்பு வெங்காய வடகம் இருந்தால் இதனில் சேர்க்கலாம்)

மிக்ஸியில் இருக்கும் கலவையை சர்விங்க் பவுலுக்கு மாற்றவும். தாளிப்பை சேர்க்கவும். சூடான இட்லி தோசை சூடான சாதம் சிறுதானிய பொங்கல் ஆகியவற்றுக்கு மிகவும் டேஸ்ட்டான சூப்பரான சைடு டிஷ் கத்திரிக்காய் பீர்க்கங்காய் கொத்சு.

வேலைக்கு செல்பவர்கள், லஞ்ச் பாக்ஸுக்கு பேக் செய்ய விரும்புபவர்கள் சிறிது புளி சேர்த்துக் கொள்ளலாம். இது போன்ற சுவையான ரெசிபிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)

news

வசந்த நவராத்திரி!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!

news

உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof

news

நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்