நட்பு

Apr 02, 2026,10:48 AM IST

- மு.பாரதி


கரும்பலகைக்கும்

சுண்ணாம்பு துண்டுகளுக்குமாம்

நட்பு 


கேள்வித் தாளுக்கும்

தேர்வுக்குமாம்

நட்பு 


மதிப்பெண்ணுக்கும்

மாணவனுக்குமாம்

நட்பு


வார்த்தைகளுக்கும்

கவிதைக்குமாம்

நட்பு 




பூவுக்கும்

வண்ணத்துப் பூச்சிக்குமாம் 

நட்பு 


மரங்களுக்கும்

காற்றுக்மாம்

நட்பு 


மேகக்கூட்டத்துக்கும்

மழைக்குமாம்

நட்பு 


வனத்துக்கும்

விலங்குக்குமாம்

நட்பு 


மண்ணுக்கும் குயவனுக்குமாம்

நட்பு


சிலைக்கும்

சிற்பிக்குமாம்

நட்பு 


கோடீஸ்வரனுக்கும்

பணத்திற்குமாம்

நட்பு 


ஏழைக்கும்

வறுமைக்குமாம்

நட்பு 


கடலுக்கும்

அலைக்குமாம்

நட்பு 


கனவுக்கும்

கற்பனைக்குமாம்

நட்பு 


நட்பு 

சிரிக்க வைக்கும் 


நட்பு 

சிந்திக்க வைக்கும் 


நட்பு 

உதவ வைக்கும்


நட்பு 

உணர வைக்கும் 


நட்பு 

மகிழ வைக்கும் 


நட்பு 

போராட வைக்கும் 


தோள் கொடுக்க நட்பு 

இருந்தால்


வானமும் வசப்படும் 


வாழ்க்கையும் 

வசந்தமாகும்


(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் , சென்னை -64)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு

news

தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

news

தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!

news

பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்

news

பிரியாவிடை!

news

திருமாலுக்கு உகந்த துளசியின் தெய்வீக மகிமை!

news

Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!

news

Short Story by Joseph Samraj: என் பெயர் ரவி!

அதிகம் பார்க்கும் செய்திகள்