சென்னை: 12 வருட காத்திருப்புக்குப் பிறகு விஷால் நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக் குழு. இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு மீண்டும் கிளம்பியுள்ளது.
மதகஜராஜா திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டில் படப்பிடிப்பு துவங்கப்பட்டு அதே வேகத்தில் படமாக்கப்பட்டது. அப்பொழுதே இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தை வெளியிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மதகஜராஜா திரைப்படம் அப்போது வெளியாகவில்லை. இதனால் படம் அப்படியே முடங்கிப் போனது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதகஜ ராஜா திரைப்படத்தை மீண்டும் திரைக்கு கொண்டுவர இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் ரசிகர்களிடையே மீண்டும் படம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று நூறு கோடி வசூலில் சாதனை படைத்தது. அதேபோல் சுந்தர் சி நடித்து வரும் கேங்கர்ஸ் திரைப்படமும் பல்வேறு எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதனால் சுந்தர்.சியைத் தேடி பல தயாரிப்பாளர்களும் ஹீரோ வாய்ப்புகளுடன் அணுகி வருகிறார்களாம்.
இந்த நிலையில் 12 வருடங்களுக்குப் பிறகு படத்தை வெளியிடுவதில் ஏற்பட்ட சிக்கல்களைப் போக்கி மீண்டும் படத்தை வெளியிடுவதற்கான கிரீன் சிக்னலை படக் குழு கொடுத்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெமினி பிலிம் சர்க்யூட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், சதீஷ், நிதின் சத்யா போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதேபோல் மறைந்த நடிகர்களான மணிவண்ணன், மனோபாலா, சிட்டிபாபு, போன்றோரும் நடித்துள்ளனர். இது தவிர நடிகர் ஆர்யா கெஸ்ட் ரோலிலும், நடிகை சதா ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.
மதகஜராஜா திரைப்படத்தை சுருக்கமாக எம்ஜிஆர் எனவும் அழைத்து வந்தனர் என்பது நினைவிருக்கலாம். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த மதகஜராஜாவுக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது விஷால் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.. அதேசமயம், சந்தானத்தின் காமெடியை மீண்டும் ரசிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}