சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் அபராதம் செலுத்துவதாக தனி நீதிபதி முன் ஒப்புக்கொண்டு ஒப்புக்கொண்டு கால அவகாசம் பெற்றுள்ள நிலையில் தற்போது அதற்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக வாத்தைகளை விட, அது பெரிய பிரச்சினையானது. பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். திரிஷாவும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்றது.
விசாரணைக்குப் பின்னர் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் வெளியிட்டார் மன்சூர் அலிகான். அவரும் மன்னித்து விட்டதாக டிவீட் போட்டார். இந்த நிலையில் மீண்டும் திரிஷா, சிரஞ்சீவி, குஷ்பு ஆகியோர் என்னுடைய பேட்டியை முழுசா பார்க்காமல் அவதூறாகப் பேசி விட்டனர் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்.
வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சதீஷ் குமார், பெண்கள் குறித்து பொது வெளியில் இப்படித்தான் பேசுவதா.. இப்படிப் பேசினால் அவர்கள் எதிர்த்துக் கருத்து கூறத்தானே செய்வார்கள். உண்மையில் திரிஷாதான் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும். இதுபோன்று செயல்படக் கூடாது என்று எச்சரித்திருந்தார்.
மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறி மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபரதம் விதித்து, அவரது வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார் நீதிபதி. இந்த அபராத தொகை இரண்டு வாரங்களுக்குள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் செலுத்தி, அது குறித்து தகவலையும் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த தொகையை செலுத்த காலம் அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர் மகாதேவன், ஷபிக் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அபராத தொகையை செலுத்துவதாக தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டு கால அவகாசமும் பெற்றுவிட்டு, தற்போது அதனை எதிர்த்து எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும் என்று கேள்வி எழுப்பினர். தனி நீதிபதி உத்தரவிற்கு தடைவிக்க மறுத்தனர். அந்த உத்தரவை திரும்ப பெற கோரி தனி நீதிபதி முன் அல்லது பணத்தை கட்ட முடியுமா முடியாதா என்று அவரிடமே தெரிவிக்கலாம் என்று மன்சூர் அலிகான் தரப்புக்கு அறிவுறுத்தி விசாரணையை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}