போபால்: பிரதமர் நரேந்திர மோடியின் காலடியில் ராணுவம் தலை வணங்கி நிற்கிறது என்று பேசியதாக மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்டா சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆனால் தான் அப்படிப் பேசவில்லை என்றும் காங்கிரஸ் என் பேச்சை திரித்து கூறுகிறது என்றும் ஜெகதீஷ் தேவ்டா ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
ஜபல்பூரில், சிவில் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தேவ்டா பேசும்போது, பஹல்காமில், சுற்றுலாப் பயணிகளின் மதத்தைக் கேட்டு பின்னர் தீவிரவாதிகள் அவர்களை சுட்டுக் கொன்னறர். பெண்களை பிரித்து விட்டு ஆண்களை மட்டும் சுட்டுக் கொன்றுள்ளனர். பெண்கள், குழந்தைகள் முன்பு அவர்கள் வீட்டு ஆண்களைக் கொன்றுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு நடந்ததை நாடு அறியும். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களை பழிவாங்கும் வரை இந்திய மக்கள் ஓயமாட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் பதிலடி தாக்குதல் பாராட்டுக்குரியது. இன்று நாடு முழுவதும், ராணுவமும், பிரதமரின் காலில் விழுந்து வணங்குகிறது. ராணுவத்தினருக்கு கை கொடுத்து பாராட்டுங்கள் என்று தேவ்டா கூறினார்.
இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பி விட்டது. தேவ்டாவின் இந்த பேச்சை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்தது. துணை முதலமைச்சரின் கருத்துக்கள் ராணுவத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஆனால், தேவ்டா உடனடியாக பதிலடி கொடுத்தார். அவர் பேசியதை காங்கிரஸ் வேண்டுமென்றே திரித்து விட்டதாக கூறினார். பிரதமர் மோடியின் கால்களில் ராணுவம் விழுந்து வணங்குவது போல் சித்தரிக்க காங்கிரஸ் முயற்சித்தது. ஆனால், அது உண்மை இல்லை என்று தேவ்டா திட்டவட்டமாக தெரிவித்தார். "பிரதமர் நரேந்திர மோடியின் பதில் பாராட்டுக்குரியது. இன்று நாடு முழுவதும் ராணுவத்தின் காலடியில் தலைவணங்குகிறது. தயவு செய்து அவர்களுக்கு ஒரு பெரிய கை கொடுங்கள்" என்றே தான் கூறியதாக தேவ்டா விளக்கியுள்ளார்.
சமீபத்தில்தான் மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா இந்திய ராணுவ அதிகாரி கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு அவர்களது சகோதரியைக் கொண்டே பதிலடி கொடுத்துள்ளது இந்தியா என்று அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அவரை கண்டித்தது. மேலும், ராணுவ அதிகாரியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து ராணுவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!
புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!
மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி
பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் எழுதினால் மானியம் மறுப்பதா.. விஜய் கண்டனம்
அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு
புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!
{{comments.comment}}