சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில், உழவார பணிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பழமையான பாரம்பரியம் மிக்க கோவில்களில் தூய்மைப்பணிகள் மற்றும் பொதுமக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப்பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரரான கார்த்திகேயன் நேரில் ஆஜராகி, கோவில்களில் உழவார பணிகள் மேற்கொள்ள அரசு அனுமதி மறுப்பதால், பல பாரம்பரியமான கோவில்கள் பாழடைந்த நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
குறிப்பாக, திருக்கருங்குடி நாதர் திருக்கோவில், மருதநல்லூர், கும்பகோணம் கோவில், தெப்பக்குளங்கள், மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் தெப்பக்குளம் பகுதிகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதற்காக புகைப்பட ஆதாரங்கள் கொடுக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் உழவார பணிகள் மேற்கொள்ள திட்டத்தை வகுக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதே போல், இந்து அறநிலைய துறையின் கீழ் உள்ள 267 பாடல் பெற்ற ஸ்தலம், 183 வைபவ ஸ்தலம், 84 வைணவ ஸ்தலங்களை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து, மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட துணை நீதிபதிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு அது குறித்த ஆயவறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவுகள் அனைத்தையும் 2 வாரத்திற்குள் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}